செய்தி வெளியீடு எண் :77 நாள் : 18.8.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் அறிவுறுத்தல்

செய்தி வெளியீடு எண் :77 நாள் : 18.8.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் அறிவுறுத்தல்


சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (17.8.2017) அன்று தனி அலுவலர் மற¦றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில்  நடைபெற்றது. 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில்  அனைத்து கோட்டங்களிலும் தீவிர துப்புரவு பணிகள், சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், குடியிருப்பு பகுதிகள் மற்றும் காலி மனைகளில் உள்ள  உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், வாகனப் பணிமனைகளில் உள்ள பயன்படாத டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்கள், வணிக வளாகங்கள் , மருத்துவமனை வளாகங்களை தூய்மையாக பராமரித்திட தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  
குறிப்பாக தனியார் மருத்துவமனைகள் தங்களது வளாகங்களையும், மருத்துவமனைகளில் பணியாற்றும்  செவிலியர்களுக்கான தங்கும் விடுதிகளையும் தூய்மையாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் , மழை நீர் தேங்காமலும் தேவையற்ற  பொருட்களை மருத்துவமனைகளில் உள்ள அறைகளில் கொட்டி வைக்காமலும், அவைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிர்வாகத்தினர்  மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் தனியார் மருத்துவமனைகளில் தீடீர் ஆய்வு மேற்கொள்ளுவார்கள்.  சுகாதாரமற்ற முறையில் உள்ள மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  எனவே மருத்துவமனை வளாகங்களை எப்பொழுதும் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டும். 
மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பொதுமக்கள் குறித்த விவரங்களை, மாநகராட்சி சுகாதார பிரிவிற்கு உடனடியாக தகவல்களை தெரிவிக்க வேண்டும்.  மருத்துவமனை வளாகங்களுக்குள் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மாதிரி கண்காட்சிகள் ஏற்படுத்துவதோடு, அதுபற்றிய விளக்க  கையேடுகள், துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள்  போன்றவைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் பொது மக்களுக்கு வழங்கிட வேண்டும். சேலம் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அறிவுரையின் பேரில், தேவைப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்துவதற்கு தயார் நிலையில் மருத்துவமனை நிர்வாகங்கள் இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆணையாளர் கேட்டுக்கொண்டார். 
இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், அனைத்து  தனியார்  மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்பட பலர்   கலந்து கொண்டனர்.