செய்தி வெளியீடு எண் :76 நாள் : 17.8.2017 துப்புரவு பணி மேற்கொள்ள வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண் :76 நாள் : 17.8.2017 துப்புரவு பணி மேற்கொள்ள வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 6 சின்னக் கொல்லப்பட்டி  அன்னை இந்திரா நகரில் 17.8.2017 அன்று  தீவிர துப்புரவு பணிகளை துவக்கி வைத்த தனி அலுவலர் மற¦றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள், சேலம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு அனைத்து பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கி, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்  கொண்டார்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து கோட்டங்களிலும் தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளில் 2000 துப்புரவு பணியாளர்களும்,  வீடுகளில் கொசுப்புழுக்களை கண்டறியும் 450 பணியாளர்கள் என மொத்தம் 2450 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  அதனடிப்படையில் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 6 சின்ன கொல்லப்பட்டி அன்னை இந்திரா நகரில் தீவிர துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் ஆணையாளரால் துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகளில் 125 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு 1 குழுவிற்கு 25 பணியாளர்கள் வீதம்  இணைந்து பணியாற்றுவார்கள். இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுவார்கள்.  குறிப்பாக பொதுமக்கள் குடிநீர் சேகரிக்க பயன்படுத்தும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பிளாஸ்டிக் டிரம்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்து, தேவையான மருந்துகளை அவற்றில் ஊற்றுவதோடு குடிநீர் சேகரிக்க பயன்படுத்தப்படும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை முறையாக பராமரிப்பதற்கு, தேவையான விவரங்களை பொதுமக்களிடம் தெரிவிப்பார்கள். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேவையற்ற பொருட்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை அப்புறப்படுத்துவதோடு சாக்கடை கால்வாய்களில் தூர்வாரும் பணிகளையும் மேற்கொள்ளுவார்கள். டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்குவதோடு, குடியிருப்பு பகுதிகளை முறையாக பராமரிப்பது தொடர்பான விவரங்களையும் எடுத்துக் கூறுவார்கள்.  
இந்நிலையில் துப்புரவு பணி மேற்கொள்ள வரும் மாநகராட்சி பணியாளர்களை பொதுமக்கள் தங்கள் வீட்டுப் பகுதிகளுக்குள் அனுமதித்து, மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வீட்டின் வெளிப்புறப்பகுதிகளில் குடிநீர் சேகரிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் டிரம்கள், பாத்திரங்களை  ஆய்வு செய்வதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள அனைத்து பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது பொருப்புகளை உணர்ந்து  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  ‘மேலும் பொதுமக்கள் தெருக்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைத்திருக்கக்கூடிய செங்கல் , ஜல்லி, மணல் போன்ற கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி, அவைகளை கட்டுமானம் நடைபெறும் இடங்களில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டு வருகிறது. 
 துப்புரவு பணி மேற்கொள்ளும் மாநகராட்சி பணியாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் விடுபடாமல் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குடியிருப்போர் நலச்சங்கங்கள் துப்புரவு பணி மேற்கொள்ளுவதற்கு உதவிட முன்வர வேண்டும். துப்புரவு பணியாளர்களின் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் மேற்பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொள்ளப்படும்  துப்புரவு பணிகளின் விவரங்களை தினசரி அறிக்கையாக, ஆணையருக்கு சமர்ப்பித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என  ஆணையர் தெரிவித்தார். 
அதன் பின்னர் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 4 தென் அழகாபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும், தீவிர துப்புரவு பணிகளை ஆய்வு செய்த ஆணையர், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமினை பார்வையிட்டு, தேவையான மருந்து இருப்புகள் வைக்கப்பட்டுள்ளதா, என்பதை கேட்டறிந்தார்.  
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் திரு.நா. சத்தியநாராயணன், திரு.ப. ரமேஷ்பாபு, மருத்துவ அலுவலர் திருமதி செ.கீர்த்தனா,  தாய் சேய் நல அலுவலர் திருமதி என். சுமதி,  உதவி செயற்பொறியாளர் திரு. எஸ்.  செல்வராஜ், சுகாதார அலுவலர்கள் திரு.எஸ். ரவிச்சந்திரன் , திரு.எம். சேகர், சுகாதார ஆய்வாளர்கள்  திரு. எஸ். சுரேஷ், திரு. ஆர். சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.