செய்தி வெளியீடு எண் :75 நாள் : 15.8.2017 சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

செய்தி வெளியீடு எண் :75 நாள் : 15.8.2017 சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா  வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்   (15.8.2017) அன¦று தனி அலுவலர் மற¦றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின¦னர் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
இந்நிகழ¦ச்சியில¦ சிறந்த முறையில்  பொது சேவையாற்றிய போதி மரம் அமைப்பு மற்றும் கலைத்துறையில்  சாதனை படைத்தவர்களுக்கும் ,  சிறந்த  பொது சேவை புரிந்த பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
  மேலும் 2016 – 17 ஆம் கல்வி ஆண்டில் மாநகராட்சி பள்ளி அளவில்  12  ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்கள்,  10  ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற  மாணவ, மாணவியர்களை பாராட்டி ஊக்கத்தொகையும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. 
12 ம் மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளிகளில்  அதிக தேர்ச்சி  சதவிகிதம் பெற்ற  7 பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் பாராட்டி  கௌரவிக்கப்பட்டனர்.  
2016 – 17 ஆம் கல்வி ஆண்டில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில்  1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் 9 பேர்களுக்கும் , 10 ம் வகுப்பு தேர்வில்  400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் 22 பேருக்கும்  பாராட்டி  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  
மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய 17 பணியாளர்களை  பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த முறையில் பணியாற்றிய மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 8 நபர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  
மேலும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கோட்டை அரசு மகளிர்  மேல¦ நிலைப்பள¦ளியில் , மாநகராட்சி  காமராஜ் மகளிர்  மேல் நிலைப்பள்ளி , அம்மாபேட்டை பாவடி மாநகராட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளி, அம்மாபேட்டை அன்னை இந்திராகாந்தி மகளிர் மேல் நிலைப்பள்ளி என மொத்தம் 4 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவியர்களுக்கு பாராட்டி சான்றதழ்களும் , நினைவுப் பரிசும் ஆணையாளர் அவர்களால் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஜி. காமராஜ், திரு.ஆர். ரவி மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் திரு.நா. சத்தியநாராயணன், திரு. ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திருமதி வி. திலகா, திரு.ப.ரமேஷ் பாபு, திரு. மு. கணேசன், திரு. கா. ராஜா , உதவி செயற்பொறியாளர்கள் , உதவி பொறியாளர்கள் , சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.