செய்தி வெளியீடு எண் :74 நாள் : 12.8.2017 சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 2 ல் ஜாகீர் சின்ன அம்மபாளையத்தில் தீவிர துப்புரவு பணிகள் மற்றும் மருத்துவ முகாம் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு

செய்தி வெளியீடு எண் :74 நாள் : 12.8.2017 சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 2 ல் ஜாகீர் சின்ன அம்மபாளையத்தில் தீவிர துப்புரவு பணிகள் மற்றும் மருத்துவ முகாம் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு

சேலம் மாநகராட்சி கோட்டம் எண்  2 ஜாகீர் சின்ன அம்மாபாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர துப்புரவு பணிகள் மற்றும் மருத்துவ முகாமினை 12.8.2017 அன்று தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.
 
பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து சேலம் மாநகர பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதி முழுவதும் தீவிர துப்புரவு பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் 12.8.2017 அன்று சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 2ல் ஜாகீர் சின்ன அம்மாபாளையம் பகுதிகளில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத்தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளையும்  ஆய்வு செய்த ஆணையர்,  வீடுகளில் பொதுமக்கள் குடிநீர் சேமிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள் போன்றவைகளை சுத்தப்படுத்தி பயன்படுத்தி வருகிறார்களா என்பதை ஆய்வு செய்தார்.  
 
பின்னர் ஆணையர்,  பொதுமக்களிடம்  உணவு கழிவுகள் , தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடை கால்வாய்களில் கொட்டாமல்,  குப்பைகளை சேகரிக்க வரும்  துப்புரவு பணியாளர்களிடம் தான் வழங்க வேண்டும் எனவும், தெருக்களிலோ, சாக்கடை கால்வாய்களிலோ அல்லது அருகில் உள்ள காலி இடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் பொது மக்கள் தங்களது வீடுகளை சுத்தமாக பராமரித்திடவும், வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.,  சலவை இயந்திரம், ஆகியவற்றை முறையாக பராமரித்திடவும்,  உரல்கள், தேங்காய் சிரட்டைகளில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்  எனவும் கேட்டுக் கொண்டார். 
பின்னர் அப்பகுதியில் நடைபெற்று வரும்   மருத்துவ முகாமினை பார்வையிட்ட ஆணையாளர் பொது மக்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனயடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகுந்த சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்  எனவும்,   தாமாக சுய மருத்துவம்  எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் தேவைக்கு ஏற்ப  அனைத்து மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும்,  மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் எந்நேரமும் தயார்  நிலையில் இருப்பதற்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  ஆணையாளர் தெரிவித்தார். 
 
மேலும் கோட்டம் எண் 2 ல் காமராஜர் நகர் நேரு வீதியில் நடைபெற்று வரும் கட்டிடங்களுக்கான வரி விதிப்பு மதீப்பீட்டு பணிகளையும் ஆய்வு செய்தார்.  பின்னர் டாக்டர்.எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேருந்துகள் எளிதாக சென்று வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, ஆலோசனை மேற்கொண்டார். 
இந்நிகழ்ச்சிகளில் செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், சுகாதார ஆய்வாளர்கள் திரு.வீ.சரவணன் , திரு.எ. கோபிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.