செய்தி வெளியிடு எண்-71 நாள் -07.08.2017 டெங்கு தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை சேலம் மாநகராட்சி தனி அலுவலர் ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

செய்தி வெளியிடு எண்-71 நாள் -07.08.2017 டெங்கு தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை சேலம் மாநகராட்சி தனி அலுவலர் ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு வாகனத்தை 07.08.2017 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜி.வெங்கடாஜலம், திரு.ஏ.பி.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விபரங்களை பொது மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு  அரசு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை வெளியிட்டுள்ளது. அக்குறும்படங்கள் இவ்வாகனத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகள் மூலம் திரையிடப்படும்.  மேலும் இவ்வாகனத்தில்  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கையேடுகள், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும்.  இவ்வாகனத்தின் மூலம்  பொது மக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் திரையிடப்படும். 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு. அ.அசோகன், திரு. ஜி.காமராஜ், திரு. ஆர். ரவி, மாநகர் நல அலுவலர் திரு. வி. பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் திரு. கே. கணேசன், திரு. பி. ராஜா, திரு. என். சத்தியராயாணன், திரு. ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திரு. பி. ரமேஷ்பாபு  சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
------------------------------------------------------
வெளியீடு  / மக்கள் தொடர்பு அலுவலம், சேலம் மாநகராட்சி.