சேலம் மாநகராட்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் பொது மக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் மாணவ, மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. 
 
அதனடிப்படையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு அனைத்து கோட்டங்களிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன் துவக்கமாக 07.8.2017 அன்று சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 21 ல் உள்ள புது ரோடு பகுதியில் விழிப்புணர்வு பணிகள் கல்லூரி மாணவ, மாணவியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ளுவதற்காக சுகாதார மேற்பார்வையாளர்கள் தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவில் 33 மாணவ,  மாணவியர்களும் சுகாதார மேற்பார்வையாளர்கள் , மலேரியா களப்பணியாளர்கள், கொசுப்புழுக்களை கண்டறிபவர்கள்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் அப்பகுதிகளில் உள்ள 46 தெருக்களில் மொத்தம் உள்ள 3,417 வீடுகள் , தேநீர் விடுதிகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், இரு சக்கர வாகன பழுது நீக்கும் இடங்கள் மற்றும் வல்கனைசிங் கடைகள் ஆகியவற்றிற்கு  நேரடியாக சென்று டெங்கு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் , ஒட்டு வில்லைகள் ஆகியவற்றை பொதுமக்களிடம் வழங்கி, டெங்கு தடுப்பு குறித்த விவரங்களை மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர் .

மேலும் மாணவ, மாணவியர்களுடன் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் உடன் சென்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்துள்ள பிளாஸ்டிக் போன்ற தேவையற்ற பொருட்களை சேகரித்தனர். மாணவ, மாணவியர்களின் உதவியுடன் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் குடியிருப்பு வீடுகளுக்குள் சென்று குடிநீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ள, சிமெண்ட் தொட்டிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கைத்தெளிப்பான்கள் மூலம்  மருந்துகள் தெளிப்பு பணிகளையும் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர்.  
அதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கி, அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடைகள் தூர்வாரி அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார  நிலையத்தையோ அல்லது அரசு  பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மாறாக சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது போன்ற விவரங்களை மாணவ, மாணவியர்கள் பொது மக்களிடம் தெரிவித்தனர்.
முன்னதாக அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட சாரதா மகளிர் கல்லூரியில் 2,500 மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு உறுதிமொழி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.  அதனைத் தொடர்ந்து சூரமங்கலம் மண்டத்தில் நடைபெற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகளில்  சக்தி கைலாஷ் மகளில் கல்லூரி, சாரதா மகளிர் கல்லூரி மற்றும் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய  கல்லூரியைச் சார்ந்த 600  மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், பெரியார் பல்கலைக் கழகத்தின் நாட்டு நல பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. இளங்கோவன் , சாரதா மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். நிறைமதி , நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் க. பாரதி, முனைவர் த. ஜெயலட்சுமி, முனைவர் ப. உமாமகேஸ்வரி ,  சுகாதார அலுவலர் திரு. எஸ்.மணிகண்டன், திரு. கே. ரவிச்சந்திரன்,  சுகாதார ஆய்வாளர் , மலேரியா களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.