நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டல நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 04.9.2017 அன்று நடைபெற்றது.

நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டல நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 04.9.2017 அன்று நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி
      செய்தி வெளியீடு எண் :83                                           நாள் :  04.9.2017
 
நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டல நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 04.9.2017 அன்று நடைபெற்றது.  
 
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டல நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 04.9.2017 அன்று நடைபெற்றது.  
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் தெரிவித்ததாவது : - 
சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சிகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் வரி வருவாய், குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை , பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் செயலாக்கம், பணியாளர்களின் நிர்வாக நலன் தொடர்பாக அனைத்து பணிகளையும் தொய்வின்றி  மேற்கொள்ள வேண்டும்.    குறிப்பாக  மாநகராட்சி மற்றும் மண்டல நகராட்சி பகுதிகளில் விடுபட்டுள்ள அல்லது குறைவாக விதிக்கப்பட்ட சொத்து வரி மற்றும் தொழில் வரி , காலிமனை வரி, குடிநீர் கட்டணங்கள் மதிப்பீடு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 
மேலும் வரி வசூலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, வருவாய் பிரிவு  உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலர்களும் செயல்பட வேண்டும்.  குடிநீர் கட்டணங்களை உரிய கால அளவிற்குள் வசூலிக்க வேண்டும். அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை  கண்டறிந்து உரிய கட்டணங்களை பெற்று, அவைகளை முறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  பாதாள சாக்கடை திட்டப்பணிகளை உரிய கால அளவிற்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் செயல்படுத்திட வேண்டும்.  பருவ நிலை மாற்றத்தின் பொழுது சுகாதார பிரிவினை சார்ந்த மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் ,  சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள்  , செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உள்ளிட்டோர் சுகாதார மேம்பாட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை செயலாக்கப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, செயல்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணையாளர் தெரிவித்தார். 
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ்  , நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குநர் திருமதி. ஆர். லஷ்மி, செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஜி. காமராஜ், திரு. ஆர். ரவி, மண்டல பொறியாளர் திரு.எஸ். திருமாவளவன், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் ,    சேலம் , நாமக்கல் , கரூர் , கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நகராட்சி ஆணையாளர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
-------------------------------------------------------------
வெளியீடு  / மக்கள் தொடர்பு அலுவலம், சேலம் மாநகராட்சி.