டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி அம்மாபேட்டை மண்டலம் அண்ணா மருத்துவமன

டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி அம்மாபேட்டை மண்டலம் அண்ணா மருத்துவமன

சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் பொது மக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்கிளைடையே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் வெளியிடப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 02.8.2017 அன்று அம்மாபேட்டை மண்டல அலுவலகம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில்  தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுக்கள் உருவாகும் முறை, மற்றும் டெங்கு தடுப்பு முறைகள் குறித்த விளக்கங்கள் ஆணையாளரால்  மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவியர்  அவர்களது பெற்றோர்களிடம் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கும், டெங்கு பரவாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிப்பதற்கு ஏதுவாக, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் , துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத்தெளிப்பான்கள்  மூலம் மருந்து தெளிப்பு பணிகள் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் குடிநீரை சேகரித்து வைத்திருக்கக்கூடிய பிளாஸ்டிக் டிரம்கள், சிமெண்ட் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் ஆகியவற்றை உரிய கால இடைவெளியில் சுத்தப்படுத்தி பயன்படுத்திட அறிவுறுத்துதல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படாத நிலையில் உள்ள பிற பொருட்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்திட கேட்டுக்கொள்ளுதல் போன்ற பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தினந்தோறும் அனைத்து கோட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என  ஆணையாளர் தெரிவித்தார்.  

இதன் பின்னர் சேலம் மாநகராட்சி துவக்கப்பள்ளி செவ்வாய்பேட்டை 28 வது கோட்டம் சேர்மேன் ரத்தினசாமி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் சார்பில் சீர் செய்யப்பட்ட கட்டிடத்தினை பார்வையிட்டார். பின்னர் அங்கன்வாடி மையத்தில்  பயிலும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு. சரவணன்,  துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. கே. பூங்கொடி, கூடுதல் இயக்குநர் மரு. வடிவேலன் , கூடுதல் பொது சுகாதாரம் மற்றும் நோய்கள் மரு. விஜய் குமார் ,    தேசிய  சாரணர்  திட்ட அலுவலர் (பெரியார் பல்கலைக் கழகம்) திரு. டி. சௌந்திரராஜன், செயற்பொறியாளர் திரு. ஜி. காமராஜ், உதவி ஆணையாளர் திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், மருத்துவ   அலுவலர் .பி.ஆர். முரளி சங்கர் ,  தாய்சேய் நல அலுவலர் திருமதி என்.சுமதி  , அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாவணவியர்கள், சுகாதார அலுவலர்கள் / சுகாதார ஆய்வாளர்கள் , தேசிய சாரண சாரணர் மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து எடுத்துக் கொண்டனர்.