செய்தி வெளியீடு எண் :24, நாள் : 05.02.2018 சூரமங்கலம் மண்டலம் செவ்வாய்பேட்டையில் ரூ.1 கோடியே 30 இலட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக தனியார் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :24, நாள் : 05.02.2018 சூரமங்கலம் மண்டலம் செவ்வாய்பேட்டையில் ரூ.1 கோடியே 30 இலட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக தனியார் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 28 –ல் செவ்வாய்பேட்டை இடுகாட்டில் ரூ. 1  கோடியே 30 இலட்சம்  மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை  பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வைகுண்டம் அறக்கட்டளையிடம் 05.02.2018 அன்று மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில்  ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.  
உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ்,  செவ்வாய்பேட்டை இடுகாட்டில் அரசு மான்யமாக ரூ. 50 இலட்சம் , மாநகராட்சியின் பொது நிதியின் கீழ் ரூ.80 இலட்சம் என மொத்தம் ரூ. 1கோடியே 30 இலட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் தகனமேடைக்கு தேவையான எரிவாயுவினை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக, உணவு கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் பணிக்கு அரசு மான்யமாக ரூ. 36 இலட்சம், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ. 9 இலட்சம் என மொத்தம் ரூ. 45 இலட்சம் மதிப்பீட்டில் உயிரி எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பிடம் மற்றும் மாநகராட்சி பொது நிதியின் கீழ்  ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு. ஜி. காமராஜ்  , உதவி செயற்பொறியாளர் திருமதி. வி. திலகா, உதவி பொறியாளர் திருமதி.கே. அன்புச்செல்வி  வைகுண்ட அறக்கட்டளை தலைவர் நந்தி டால் மில் திரு.எ. குமார், செயலாளர் திரு. வி.சி. சதீஷ், பொருளாளர்கள் திரு.பிரமோத் குமார், திரு.கே.என். ஈஸ்வரன், திரு.எஸ்.கே. பெரியசாமி, திரு.பி. சுகுமார், திரு.டி.எஸ். சண்முகம், திரு.கே. முருகானந்தம், திரு. எ. சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.