செய்தி வெளியீடு எண் :23, நாள் : 05.02.2018 பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.51.75 இலட்சம் மதிப்பீட்டில் 22 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :23, நாள் : 05.02.2018 பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.51.75 இலட்சம் மதிப்பீட்டில் 22 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை பெறுவதற்கு ஏதுவாக, இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு,   பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டும், ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் 05.02.2018 அன்று அஸ்தம்பட்டி மண்டலம்  கோட்டம் எண் 6 சின்னக் கொல்லப்பட்டியில் லட்சுமி விலாஸ்  வங்கி சார்பில், பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.11.25 இலட்சம் மதிப்பீட்டில்  5 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல  மோட்டார் வாகனம் பொதுமக்களின்  பயன்பாட்டிற்கு    மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ் அவர்களால் வழங்கப்பட்டது. 
 
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக,  இருவண்ண கூடைகள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும்  திடக்கழிவுகளை  பொது மக்களிடமிருந்து பெறுவதற்காக இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல வாகனங்கள் அனைத்து கோட்டங்களுக்கும் வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் இதுவரை ரூ. 51.75 இலட்சம் மதிப்பீட்டில் 22  இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல  மோட்டார் வாகனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் பொதுமக்கள் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக, இரு வண்ணக் கூடைகளும் வழங்கப்பட்டு வருகிறது.  
மாநகராட்சி பகுதிகளில் சுகாதார மேம்பாடு நலன் கருதி, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.  திடக்கழிவுகளை தரம்  பிரித்து வழங்குவதால்  அவை முறையாக சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கக்கூடிய உலர் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக, 4 மண்டலங்களிலும் தலா 1 உலர் கழிவு சேகரிப்பு மையம் மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.  சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் போன்ற தேவையற்ற பொருட்கள் சாக்கடை கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்காமல் தடுக்கப்படுகிறது.  இதன் மூலம் பொதுமக்களின் சுகாதாரம் பேணிக் காக்கப்படுகிறது.  பொதுமக்களின் சுகாதாரம் கருதி, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஆர். ரவி, மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், லட்சுமி விலாஸ்  வங்கி மண்டல மேலாளர்  திரு.வி. சந்திர சேகர், முதன்மை மேலாளர்கள் திரு.டி.எஸ். ஸ்ரீராம் ,  திரு.டி. வெங்கடசுப்ரமணியம், திரு.எஸ்.ஆர். சாம்பமூர்த்தி, சுகாதார அலுவலர் திரு.கே. ரவிச்சந்திரன் , 
சுகாதார ஆய்வாளர்  திரு.எ. சங்கர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.