செய்தி வெளியீடு எண்.22,நாள்: 01.02.2018 அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் பயன்பெறுவதற்காக விண்ணப்ப படிவம் பெற்றவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.02.2018 திங்கட்கிழமை மாலைக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

தமிழ்நாடு  அரசின் உத்தரவின்படி பணிக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் , 50 சதவீதம் மானியத்தில் இரு சக்கர வாகனங்கள் பெறுவதற்காக விண்ணப்பங்கள் 22.01.2018 முதல் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.  
இதுவரை சூரமங்கலம் மண்டலத்தில் 1811, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 1388 , அம்மாபேட்டை மண்டலத்தில் 748 ,  கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 1105 என மொத்தம் 5052 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 05.02.2018 திங்கட்கிழமை வரை வழங்கப்படும். மேலும்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.02.2018 திங்கட்கிழமை மாலைக்குள் சமர்ப்பித்திட வேண்டும்.  இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, 03.02.2018 சனிக்கிழமை, 04.02.2018 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள்  அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு மையங்கள் அலுவலக நேரங்களில் செயல்படும். 
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பூர்த்தி  செய்த விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் வழங்கி, பயன்பெறுமாறு  ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.