செய்தி வெளியீடு எண்.20, நாள்: 29.01.2018 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

செய்தி வெளியீடு எண்.20, நாள்: 29.01.2018 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

 
                 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு மறுவரையறை குறித்த 
கலந்தாய்வு கூட்டம் 29.01.2018 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு வார்டு மறுவரையறை ஆணையத்தின் அறிவுரையின் பேரில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வார்டு மறுவரையறை வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாவட்ட மறுவரையறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏற்கனவே மறுவரையறை தொடர்பாக  பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை ஆய்வு செய்து தீர்வு காணும் பொருட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன்,  திரு.ஆர்.ரவி, திரு.ஜி. காமராஜ், உதவி ஆணையாளர் திரு.ப.ரமேஷ்பாபு, திரு.கே.பி.கோவிந்தன், திரு.ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், திரு.மு.கணேசன், திருமதி.டி.ரெங்கநாயகி 
உதவி செயற்பொறியாளர்கள் திருமதி.வி.திலகா, திரு.ஆர்.செந்தில் குமார், திரு.எம்.ஆர்.சிபிசக்ரவர்த்தி,  அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்   உள்பட பலர் கலந்து கொண்டனர்.