செய்தி வெளியீடு எண்.19, நாள்: 29.01.2018 சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் 29.01.2018 அன்று நூலகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் திறந்து வைத்தார்.

செய்தி வெளியீடு எண்.19, நாள்: 29.01.2018 சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் 29.01.2018 அன்று நூலகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் திறந்து வைத்தார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில்  மக்கள் தொடர்பு பிரிவில் 29.01.2018 அன்று புதிய நூலகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திறந்து வைத்தார்.
ஆணையாளர் அலுவலகத்திற்கு பணிநிமித்தம் காரணமாக வருகை தரும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இலக்கியம் , வரலாறு, சமயம், சட்டம், பொருளாதாரம், அறிவியல், கவிதைகள், கட்டுரைகள்,மொழியியல் தொடர்பான புத்தகங்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திகொள்ள ஏதுவாக போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் பொது மக்கள் மற்றும் அலுவலர்கள் பார்வைக்காக இந்நூலகத்தில் வைக்கப்படும் என ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன்,  திரு.ஆர்.ரவி, திரு.ஜி. காமராஜ், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி ஆணையாளர் திரு.ப.ரமேஷ்பாபு, திரு.கே.பி.கோவிந்தன், திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், 
திரு.மு. கணேசன், திருமதி.டி.ரெங்கநாயகி உதவி செயற்பொறியாளர்கள் திருமதி.வி.திலகா, திரு.ஆர்.செந்தில் குமார், திரு.எம்.ஆர்.சிபிசக்ரவர்த்தி, சுகாதார அலுவலர்கள்  மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.