செய்தி வெளியீடு எண்.18, நாள்: 29.01.2018 (31.01.2018) அன்று வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் அறிவிப்பு`

செய்தி வெளியீடு எண்.18, நாள்: 29.01.2018 (31.01.2018) அன்று வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் அறிவிப்பு`

     தமிழக அரசின் உத்திரவின்படி (31.01.2018) அன்று வள்ளலார்  தினத்தினை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது என்பதால், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் மேற்கண்ட தேதியன்று தங்கள் கடைகளை அடைத்து அரசின் உத்திரவினை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.  
                  அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் நான்கு மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.  அரசின் உத்திரவினை மீறி சட்டத்திற¦கு புறம்பாக  செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி  ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.