செய்தி வெளியீடு எண் : 17,நாள் : 26.01.2018 மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திருரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

செய்தி வெளியீடு எண் : 17,நாள் : 26.01.2018 மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திருரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில்  துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை 26.01.2018 அன்று அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட நேரு கலையரங்கில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார். 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வரும், துப்புரவு பணியாளர்கள் கடந்த 6 மாத காலமாக டெங்கு தடுப்பு பணிகளில், முழு ஈடுபாட்டோடு மேற்கொண்டனர். இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் மருத்துவ முகாம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  அதனடிப்படையில் அனைத்து பணியாளர்களுக்கும் தேவையான பரிசோதனைகள் செய்து,  உரிய மருந்துகள் வழங்கப்பட்டது.  மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள நிலையில் , தற்போது துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான சீருடைகளை ஆணையாளர் வழங்கினார்.   
அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 44 ல் எருமாபாளையம் எருகிடங்கு அருகில் உள்ள பகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டுமான பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 36 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்  துப்புரவு பணியாளர்களின் அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என ஆணையாளர்  தெரிவித்தார். 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.அ.அசோகன்,  மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன்,  உதவி ஆணையாளர்கள் திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திரு.கே.பி. கோவிந்தன், திரு.மு. கணேசன், சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.