செய்தி வெளியீடு எண் :15, நாள் : 24.01.2018 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50 ஆண்டி கவுண்டர் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு இருவண்ண கூடைகள் மற்றும் இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்.

செய்தி வெளியீடு எண் :15, நாள் : 24.01.2018 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50 ஆண்டி கவுண்டர் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு இருவண்ண கூடைகள் மற்றும் இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50 ஆண்டி கவுண்டர் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ (ருniடிn க்ஷயமே டிக ஐனேயை )-வின் சார்பில் வழங்கப்பட்ட இருவண்ண கூடைகள் மற்றும் வீடுகளில் சேகாரமாகும்  திடகழிவுகளை  பொது மக்களிடமிருந்து பெறுவதற்காக இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல வாகனத்தினையும், மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ் அவர்கள் 24.01.2018 அன்று  வழங்கினார்.
 
சேலம் மாநகர பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பல்வேறு சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை  செயலாக்கம், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, தனி நபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான விழிப்புணர்வு பணிகள் , வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   
அதனடிப்படையில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு தினந்தோறும் நேரடியாக சென்று, தரம் பிரித்து வழங்கப்படும் கழிவுகளை பெறுவதற்கு, சுகாதார பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் இப்பகுதிக்கென மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில்  இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனம் கழிவுகளை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. ஆண்டி கவுண்டர் தெருவில் உள்ள 110 குடியிருப்புகளுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக, பச்சை மற்றும் நீல நிற கூடைகள் வழங்கப்பட்டுள்ளது என  மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். மேலும், திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா (ருniடிn க்ஷயமே டிக ஐனேயை )-வின் சேலம் மண்டல தலைவர் திரு.இ.புல்லாராவ், முதன்மை மேலாளர் திரு.வினோத் குமார், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் திரு.ஆர்.செந்தில்குமார், உதவி பொறியாளர் திரு.ஜே.ஓபுளி சுந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு.எம்.சித்தேஸ்வரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.