செய்தி வெளியீடு எண் :14 , நாள் : 23.01.2018 போகி பக்கெட் சேலன்ஞ்-2018 இயக்கத்தின் மூலம் 8 ஆயிரத்து 165 எண்ணிக்கையிலான மறுபயன்பாட்டுப் பொருட்களும் 3 ஆயிரத்து 950 கிலோ அளவிலான மறுசுழற்சி பொருட்களும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

செய்தி வெளியீடு எண் :14 , நாள் : 23.01.2018 போகி பக்கெட் சேலன்ஞ்-2018 இயக்கத்தின் மூலம் 8 ஆயிரத்து 165 எண்ணிக்கையிலான மறுபயன்பாட்டுப் பொருட்களும் 3 ஆயிரத்து 950 கிலோ அளவிலான மறுசுழற்சி பொருட்களும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல்  கொண்டாடுவதற்கு ஏதுவாக 10.01.2018 முதல் 20.01.2018 வரை போகி பக்கெட் சேலன்ஞ் (க்ஷhடிபi க்ஷரஉமநவ ஊhயடடநபேந) இயக்க பணிகள்  மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது.  போகி பக்கெட் சேலன்ஞ் (க்ஷhடிபi க்ஷரஉமநவ ஊhயடடநபேந) இயக்கத்தினை மாணவ, மாணவியர்கள் மூலம் பொது மக்களிடம் எடுத்து சென்று வெற்றிகரமான இயக்கமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. 
அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில்   செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,  கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் விடுதிகளிலிருந்து சேகரிக்கக் கூடிய  பழைய துணிகள், காலணிகள் போன்றவற்றை சேகரிப்பதற்காக 10.01.2018 முதல் 20.01.2018 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டது. மேலும்  மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 25 மையங்கள் என 4 மண்டலங்களில் அமைக்கப்பட்டிருந்த 100 சிறப்பு மையங்களில்  பொது மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பழைய பிளாஸ்டிக் மற்றும் கோரை பாய்கள், தலையணைகள், காலணிகள், டயர்கள் போன்ற உபயோகமற்ற பொருட்கள் சேகரிக்கபட்டது. 
இவ்வாறு பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களிடமிருந்து பெறப்பட்ட பயன்படுத்திய பொருட்களை மறுபயன்பாட்டு பொருட்கள், மறு சுழற்சிக்கான பொருட்கள், எதற்கும் உபயோகமற்ற பொருட்கள் என தரம் பிரிக்கப்பட்டதில் 1528 சட்டைகள், 1197 கால்சட்டை மற்றும் பேண்ட்கள், 270 ஜீன்ஸ், 1050 சுடிதார்கள், 1200 புடவைகள் மற்றும்  குழந்தைகள் ஆடைகள் 2920 என மொத்தம் 8165 எண்ணிக்கையிலான மறுபயன்பாட்டு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இவைகளை பயன்படுத்தும் வகையில் தயார் செய்து மாநகராட்சி பகுதி மற்றும் புற நகர் பகுதிகளில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் வழங்குவதற்கான நடவடிக்கையினை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மேலும், மறுசுழற்சி பொருட்களாக 420 கிலோ அளவிலான ஆடைகளும் 210 கிலோ அளவிலான காலணிகளும், 2650 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்களும், 670 கிலோ அளவிலான இதர பொருட்கள் என மொத்தம் 3950 கிலோ அளவிலான மறுசுழற்சி பொருட்களும், 244 கிலோ அளவிலான எதற்கும் உபயோகபடுத்த முடியாத அளவில் பொருட்களும் கிடைக்கப்ப பெற்றுள்ளது. மேலும், 995 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் பொது மக்களிடத்தில் பெறப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இப்புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், மாணவ, மாணவியர்களுக்கும், இவ்வியக்கத்தில் பங்கு கொண்டு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தன்னார்வு அமைப்புகளுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.