செய்தி வெளியீடு எண்.13, நாள்:23 .01.2018 சேலம் மாநகராட்சிகுட்பட்ட நான்கு மண்டலங்களில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 27.086 கி.மீ அளவிலான 63 சாலை மறு சீரமைப்பு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

செய்தி வெளியீடு எண்.13, நாள்:23 .01.2018 சேலம் மாநகராட்சிகுட்பட்ட நான்கு மண்டலங்களில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 27.086 கி.மீ அளவிலான 63 சாலை மறு சீரமைப்பு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், தனிக்குடிநீர் திட்டம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சாலைகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை மறு சீரமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2017-2018-ன் ரூ. 3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில்  பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பணிகளை 23.01.2018 அன்று கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண்: 53 அருணாசலம்  தெரு பகுதியில் சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி சக்திவேல் அவர்கள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.  
20.01.2018 அன்று சூரமங்கலம் மண்டலத்தில் ரூ.3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 7.553 கி.மீ அளவிலான 16 சாலை மறு சீரமைப்பு பணிகளும், 22.01.2018 அன்று அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 6.105 கி.மீ அளவிலான 12  சாலை மறு சீரமைப்பு பணிகளும் துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 23.01.2018 அன்று கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ. 3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 14  சாலை மறு சீரமைப்பு பணிகளும், அம்மாபேட்டை மண்டலத்தில் ரூ.3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 8.625 கி.மீ அளவிலான 21 சாலை மறு சீரமைப்பு பணிகள் என மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 27.086 கி.மீ அளவிலான  63 சாலை மறு சீரமைப்பு பணிகள்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஆர்.ரவி, உதவி செயற்பொறியாளர் திரு.ஆர்.செந்தில்குமார், உதவி பொறியாளர் திரு.ஜே.ஓபுளி சுந்தர் மற்றும் இளநிலை பொறியாளர் திரு.வி.ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.