செய்தி வெளியீடு எண் : 11, நாள் : 20 .01.2018 சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணிகளை 20.01.2018 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

செய்தி வெளியீடு எண் : 11, நாள் : 20 .01.2018 சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணிகளை 20.01.2018 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 24 ல் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்பும்  நிதியின் கீழ்  ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்  தார் தளங்களை  கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணிகளை  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
 
பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயண நிமித்தமாக வந்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தில் மொத்தம் உள்ள 4 தளங்களில் 80 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளது.  இப்பேருந்து நிலைய வளாகத்தினுள் உள்ள சாலைகள் அனைத்தும் தார்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது.  மழைக்காலங்களில் இந்த சாலைகளில் உள்ள தார் தளங்களில் ஏற்படும் பாதிப்புகளினால் பேருந்துகள் இயக்குவதற்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, மேற்படி தார்தளங்களை உறுதியான கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  
 
அதனடிப்படையில் பராமரிப்பு மற்றும் இடைவெளி  நிரப்பும் நிதி 2016 – 17 ன் கீழ் ரூ 5.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பேருந்து  நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து தார் தளங்களும் கான்கிரீட் தளங்களாக மாற்றப்படும் பணிகள் நடைபெற்று  வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் உள்ள மண் பரிசோதனை செய்து தகுந்து தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்காக சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இப்பணிகள் முடியும் வரை சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மின்விளக்குகள் வசதி மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திடுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ்,  உதவி செயற்பொறியாளர் திருமதி.வி.திலகா உதவி பொறியாளர் திருமதி என். சுமதி உள்பட பலர் இருந்தனர்.