சேலம் மாநகராட்சி பகுதி உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்ப

சேலம் மாநகராட்சி பகுதி உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்ப

சேலம் மாநகராட்சி பகுதிகளில்  உள்ள பள்ளிகளில் பயிலும்  2 இலட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான வேண்டுகோள் கடிதம்
 தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ்  அவர்கள் அனுப்பியுள்ளார்

    சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 213 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு  டெங்கு தடுப்பு மற்றும்   விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவித்திடும் வகையில்  தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ்  அவர்கள் வேண்டுகோள் கடிதத்தினை  அனுப்பியுள்ளார்.

    சேலம் மாநகர பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தினசரி அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும், மாணவ, மாணவியர்களிடையே டெங்கு தடுப்பு உறுதிமொழி மேற்கொள்ளுதல், விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களிடையே டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வதன் மூலம் , அனைத்து பொதுமக்களையும் எளிதாக சென்றடையும் என்பதனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் பள்ளி மாணவ, மாணவியர்களைக்  கொண்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  

    28.7.2017 அன்று கோட்டை  ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நிலவேம்வு குடிநீர் வழங்கி, டெங்கு தடுப்பு  விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்த ஆணையாளர் மாணவர்களிடம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் குறித்த விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்திடும் வகையில் மாணவ, மாணவியர்களுக்கு எழுதப்பட்ட வேண்டுகோள் கடிதத்தினை வழங்கினார்.  இக்கடிதத்தினை ஒவ்வொரு மாணவ, மாணவியர்களுக்கும் அவர்களது பெயர் , வகுப்பு , பிரிவு உள்ளிட்ட விவரங்களை தனித்தனியாக எழுதி சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்கு பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும்,  இக்கடிதத்தினை மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்களிடம் வழங்கி, அக்கடிதத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மற்றும் வீடுகளை சுத்தமாக பராமரிப்பது தொடர்பாக  தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிவித்திடுமாறு ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் பி.ஆர். முரளி சங்கர், தாய்சேய் நல அலுவலர் திருமதி என்.சுமதி, சுகாதார அலுவலர்கள் திரு.கே.ரவிச்சந்திரன் , திரு. எஸ்.சுரேஷ், சுகாதார ஆய்வாளர் திரு.எம்.சித்தேஸ்வரன் , பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு.ஆ. இராஜா தேசிங்கு மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.