செய்தி வெளியீடு எண்.10, நாள்: 20.01.2018 சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ. 3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகளை மறு சீரமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

செய்தி வெளியீடு எண்.10, நாள்: 20.01.2018 சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ. 3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகளை மறு சீரமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

 
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், தனிக்குடிநீர் திட்டம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சாலைகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை மறு சீரமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2017-2018-ன் கீழ் 16 பணிகள் 7.553 கி.மீ நீளத்திற்கு தேர்வு செய்யப்பட்டு ரூ. 3 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில்  பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பணிகளை 20.01.2018 அன்று சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்: 3 ராமசாமி நகர் பகுதியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.  
வ. எண் கோட்டம் எண். பணியின் விபரம் நீளம்
 (கி.மீ) அகலம் (மீ.ல்) மதிப்பீடு 
(ரூ.இலட்சம்)
1 1 குமரன் நகர் மற்றும் சீதாராமன் தெரு 0.300 5.00 17.40
2 2 பெரியாண்டவர் கோவில் தெரு 0.600 4.00 23.20
3 3 ராமசாமி நகர் பிரதானசாலை 0.500 4.50 21.85
4 3 லஷ்மண் நகர் 0.450 5.00 21.85
5 18 ஸ்வர்ணபுரி அனெக்ஸ் சாலை 0.270 6.00 15.70
6 18 கார்கானா தெரு 0.305 4.50 14.50
7 19 அந்தோணிபுரம் 0.340 5.00 16.50
8 23 கிருஷ்ணா தெரு, தபதி தெரு, கபினி தெரு மற்றும் பழனியப்பா நகர் 0.463 5.50 26.50
9 24 மூலப்பிள்ளையார் கோவில் சாலை 0.875 6.00 50.50
10 26 அல்ராஜ் தெரு 0.350 6.00 20.50
11 28 பெரியார் காலனி குடியிருப்பு 0.500 5.50 29.00
12 20 இடுகாடு செல்லும் (வெள்ளையகவுண்டர் தெரு) 0.300 4.50 13.00
13 21 கபிலர் தெரு மற்றும் குறுக்குத் தெரு 0.420 4.00 16.30
14 21 இந்திரா நகர் மற்றும் எழில் நகர் 0.800 5.00 38.65
15 22 மொரம்புகாடு மற்றும் மோட்டுக்காடு 0.580 4.50 25.30
16 25 மணிபுரம் பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு 0.500 5.00 24.25
மொத்தம் 7.553 375.00
 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஜி.காமராஜ், உதவி ஆணையாளர் திரு.பி.ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் திருமதி.வி.திலகா, இளநிலைபொறியாளர் (திட்டம்) சிறப்பு நிலை ஐ திரு.எம்.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.