செய்தி வெளியீடு எண்: 09, நாள்:18.01 .2018 சேலம் மாநகராட்சி பகுதிகளில் (21.01.2018) மற்றும் (22.01.2018) ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக குடிநீர் விநியோகம் நிறுத்தம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் அறிவிப்பு.

சேலம் மாநகராட்சிக்கு குடிநீர்  வழங்கப்பட்டு வரும் மேட்டூர் தொட்டில்பட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் உள்ள நீர்கசிவுகளை சரி செய்யவும்  ஏதுவாக  (21.01.2018)  ஞாயிற்று கிழமை மற்றும் (22.01.2018) திங்கட்கிழமை  ஆகிய இரண்டு நாட்கள், தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. 
எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.