செய்தி வெளியீடு எண் : 7, நாள் : 11.01.2018 போகி பக்கெட் சேலன்ஞ்-2018 - க்ஷhடிபi க்ஷரஉமநவ ஊhயடடநபேந-2018 விழிப்புணர்வு பேரணியினை ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் முன்னிலையில் பயிற்சி ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.

செய்தி வெளியீடு எண் : 7, நாள் : 11.01.2018 போகி பக்கெட் சேலன்ஞ்-2018 - க்ஷhடிபi க்ஷரஉமநவ ஊhயடடநபேந-2018 விழிப்புணர்வு பேரணியினை ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் முன்னிலையில் பயிற்சி ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.

போகி பக்கெட் சேலன்ஞ்-2018 - க்ஷhடிபi க்ஷரஉமநவ ஊhயடடநபேந-2018 விழிப்புணர்வு பேரணியினை 11.01.2018 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் முன்னிலையில் பயிற்சி ஆட்சியர்கள் தொடங்கி  வைத்தனர்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல்  கொண்டாடுவதற்கு ஏதுவாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1000-க்கும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மைய அலுவலகத்திலிருந்து புறப்பட்டு தொங்கும் பூங்கா வளாகத்தை சென்றடைந்தது. புகையில்லா போகி கொண்டாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த பதாதைகள் மற்றும் பழைய பொருட்களை தீயிட்டு  கொளுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதாதைகளும் மாணவ, மாணவியர்களால் எடுத்து செல்லப்பட்டது. மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 
 
இப்பேரணியில் மாநகராட்சி குகை மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  மற்றும் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து 1000-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு. அ.அசோகன், திரு. ஆர். ரவி, மாநகர் நல அலுவலர் திரு. வி. பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் திரு. கே. கணேசன், திரு.கே.பி. கோவிந்தன், திரு. ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.