செய்தி வெளியீடு எண் : 5,நாள் : 10.01.2018 போகி பக்கெட் சேலன்ஞ்-2018 - இயக்கம் மாணவ, மாணவியர்கள் மூலம் வெற்றிகரமான இயக்கமாக மாறும் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

செய்தி வெளியீடு எண் : 5,நாள் : 10.01.2018 போகி பக்கெட் சேலன்ஞ்-2018 - இயக்கம் மாணவ, மாணவியர்கள் மூலம் வெற்றிகரமான இயக்கமாக மாறும் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்.

சேலம் மாநகராட்சி பகுதியில் போகி பக்கெட் சேலன்ஞ்-2018 -  இயக்கம் மாணவ, மாணவியர்கள் மூலம் வெற்றிகரமான  இயக்கமாக மாறும்  என 10.01.2018 அன்று கோட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போகி பக்கெட் சேலன்ஞ்-2018 இயக்கத்தினை துவக்கி வைத்த ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தெரிவித்தார்.
 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல்  கொண்டாடுவதற்கு ஏதுவாக 10.01.2018 முதல் 20.01.2018 வரை போகி பக்கெட் சேலன்ஞ் இயக்கம் மூலம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மாணவ, மாணவியர்கள் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, மாநகர் பகுதி முழுவதும் டெங்கு முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு போகி பக்கெட் சேலன்ஞ் (க்ஷhடிபi க்ஷரஉமநவ ஊhயடடநபேந) இயக்கத்தினை மாணவ, மாணவியர்கள் மூலம் பொது மக்களிடம் எடுத்து சென்று வெற்றிகரமான இயக்கமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 
அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில்   செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,  கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் விடுதிகளிலிருந்து சேகரிக்கக் கூடிய  பழைய துணிகள், காலணிகள் போன்றவற்றை சேகரிப்பதற்காக 10.01.2018 முதல் 20.01.2018 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  அட்டை பெட்டிகள் வைக்கப்படும். மேலும்  மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 25 மையங்கள் என 4 மண்டலங்களில் 100 சிறப்பு மையங்கள் பழைய பொருட்களை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டு அது தொடர்பான விவரங்கள் சம்மந்தப்பட்ட பகுதி வாழ் பொது மக்களுக்கு மாநகராட்சி பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 
பொது மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பழைய பிளாஸ்டிக்  மற்றும் கோரை பாய்கள், தலையணைகள், காலணிகள், டயர்கள் போன்ற உபயோகமற்ற பொருட்களை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள உலர்கழிவு சேகரிப்பு மையத்தில் வழங்கிடலாம். மேலும், பொதுமக்களிடையே புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் டிபிசி  பணியாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் தன்னார்வு அமைப்புகள் மூலம் ஒட்டு வில்லைகள், துண்டு பிரசுரங்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. போகி பக்கெட் சேலன்ஞ்  இயக்கத்தினை பொதுமக்களின் பங்களிப்போடு செயல்படுத்தி, சேலம் மாநகராட்சி பகுதி வாழ்மக்கள் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல்  கொண்டாடுவதற்கு ஏதுவாக, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என ஆணையாளர் கேட்டுக்கொண்டார். 
இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மரு.வி.பிரபாகரன், கோட்டை 
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பா.வே. சுகன்யா தமிழ்செல்வி, துணை தலைமை ஆசிரியர் திரு.த.மணிவண்ணன், சுகாதார அலுவலர் திரு.கே.ரவிசந்தர், சுகாதார ஆய்வாளர் திரு. எஸ்.சுரேஷ் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.