செய்தி வெளியீடு எண் : 4, நாள் : 06 .01.2018 சேலம் மாநகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல் கொண்டாடுவதற்கு ஏதுவாக போகி பக்கெட் சேலன்ஞ் இயக்கம் அறிமுகம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் : 4, நாள் : 06 .01.2018 சேலம் மாநகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல் கொண்டாடுவதற்கு ஏதுவாக போகி பக்கெட் சேலன்ஞ் இயக்கம் அறிமுகம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல்  கொண்டாடுவதற்கு ஏதுவாக 10.01.2018 முதல் 20.01.2018 வரை போகி பக்கெட் சேலன்ஞ் இயக்கம் மூலம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 06.01.2018 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில்  மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் போகி பண்டிகையினை  முன்னிட்டு, பொது மக்கள் தங்களது வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும்  பழைய பொருட்களை பெறுவதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 25 மையங்கள் என 4 மண்டலங்களில் 100 சிறப்பு மையங்கள் பழைய பொருட்களை சேகரிப்பதற்காக அமைக்கப்பட உள்ளது.
பொது மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பழைய பிளாஸ்டிக்  மற்றும் கோரை பாய்கள் , தலையணைகள், காலனிகள், டயர்கள் போன்ற உபயோகமற்ற பொருட்களை  மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள உலர்கழிவு சேகரிப்பு மையத்தில் வழங்கிடலாம். மேலும்  மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,  கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்கள் வீடுகள் மற்றும் விடுதிகளிலிருந்து சேகரிக்கக் கூடிய  பழைய துணிகள், காலனிகள் போன்றவற்றை சேகரிப்பதற்காக 10.01.2018 முதல் 20.01.2018 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  அட்டை பெட்டிகள் வைக்கப்படும்.
பொதுமக்களிடையே புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், 10.01.2018 முதல் 20.01.2018 வரை நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  அதனடிப்படையில்  பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல்,  அனைத்து வீடுகளுக்கும் டிபிசி  பணியாளர்கள், பரப்புரையாளர்கள் மூலம் ஒட்டு வில்லைகள், துண்டு பிரசுரங்கள் வெளியிடுதல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள் அமைத்தல் , வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்புதல் மற்றும் தெரு முனை பிரச்சாரங்கள்  போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்போடு  மேற்கொள்ளுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  
போகி பக்கெட் சேலன்ஞ் இயக்கத்தினை பொதுமக்களின் பங்களிப்போடு செயல்படுத்தி, சேலம் மாநகராட்சி பகுதி வாழ்மக்கள் புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல்  கொண்டாடுவதற்கு ஏதுவாக, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் இப்புதிய முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இக்கூட்டத்தில் உதவி ஆணையாளர்கள் திரு.ப. ரமேஷ்பாபு, திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திரு.மு. கணேசன், திரு.கே.பி. கோவிந்தன், சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.