செய்தி வெளியீடு எண் :02 நாள் : 03.01.2018 01.01.2018 முதல் பிறப்பு பதிவினை குடிமை பதிவு முறை (ஊiஎடை சுநபளைவசயவiடிn ளுலளவநஅ) மூலம் மேற்கொள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல (சுநயீசடினரஉவiஎந ஊhடைன ழநயடவா) எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :02 நாள் : 03.01.2018 01.01.2018 முதல் பிறப்பு பதிவினை குடிமை பதிவு முறை (ஊiஎடை சுநபளைவசயவiடிn ளுலளவநஅ) மூலம் மேற்கொள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல (சுநயீசடினரஉவiஎந ஊhடைன ழநயடவா) எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

01.01.2018 முதல் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிகழும்  பிறப்புகள் அனைத்தும் குடிமை பதிவு முறை (ஊiஎடை சுநபளைவசயவiடிn ளுலளவநஅ) மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும். இம்முறையில் பிறப்பினை பதிவு செய்வதற்கு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் பதிவு  எண்  (சுநயீசடினரஉவiஎந ஊhடைன ழநயடவா – சுஊழ - ஐனு )    கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு குடிமைப் பதிவு முறையினை  (ஊiஎடை சுநபளைவசயவiடிn ளுலளவநஅ) அறிமுகப்படுத்தியுள்ளது.  இம்முறையில் பிறப்புகளை பதிவு செய்வதற்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் பதிவு எண்  (சுநயீசடினரஉவiஎந ஊhடைன ழநயடவா – சுஊழ - ஐனு )    கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்த எண்ணை பெறுவதற்கு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கருவுற்ற தாய்மார்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  பதிவு செய்யும் பொழுது கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்களது கணவரின் ஆதார் அட்டை நகலினை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கிட வேண்டும்.  
மேலும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்ப கால பரிசோதனைகளை மேற்கொள்ளாமல், தனியார் மருத்துவமனைகளில் கர்ப்ப கால பரிசோதனைகளை மேற்கொள்ளும் கர்ப்பிணி பெண்களும் கண்டிப்பாக தங்களது குடியிருப்பு பகுதிகளில் அருகில் உள்ள , நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தங்களது விவரங்களை பதிவு செய்து, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் பதிவு  எண்  (சுநயீசடினரஉவiஎந ஊhடைன ழநயடவா – சுஊழ - ஐனு)   பெற்றால் மட்டுமே தங்களது குழந்தை பிறப்பினை பதிவு செய்ய இயலும். எனவே சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கருவுற்ற அனைத்து  தாய்மார்களும் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, தங்களது விவரங்களை  பதிவு செய்து, பிறப்பு சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.