செய்தி வெளியீடு எண் :177, நாள் : 31.12.2017 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவுற்ற பகுதிகளில் ரூ. 94 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகளை மறு சீரமைக்கும் பணிகளுக்கு 31.01.2018 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்படும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :177, நாள் : 31.12.2017 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவுற்ற பகுதிகளில் ரூ. 94 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகளை மறு சீரமைக்கும் பணிகளுக்கு 31.01.2018 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்படும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்  நிறைவுற்ற   பகுதிகளில் ரூ. 94 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகளை மறு சீரமைக்கும் பணிகளுக்கு 31.01.2018 ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
சூரமங்கலம் மண்டல பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 சிப்பங்களாக 100 சாலைப்பணிகள் 46.146 கிலோ மீட்டர் அளவிற்கு ரூ. 27 கோடியே 18 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், அஸ்தம்பட்டி மண்டல பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 8 சிப்பங்களாக 114 சாலைப்பணிகள் 69.820 கிலோ மீட்டர் அளவிற்கு ரூ. 41 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டிலும், அம்மாபேட்டை மண்டல பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 சிப்பங்களாக 83 சாலைப்பணிகள் 21.425 கிலோ மீட்டர் அளவிற்கு ரூ. 12 கோடியே 85 இலட்சம் மதிப்பீட்டிலும், கொண்டலாம்பட்டி  மண்டல பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 சிப்பங்களாக 55 சாலைப்பணிகள் 19.855 கிலோ மீட்டர் அளவிற்கு ரூ. 12 கோடியே 86 இலட்சம்  மதிப்பீட்டிலும், என மொத்தம் 16 சிப்பங்களாக 352 பணிகள், 157.246 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 94 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.  
மேற்கண்ட பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் 31.01.2018 அன்று இறுதி செய்யப்பட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்பெற்று, குறிப்பிட்ட கால அளவிற்குள்  அனைத்து பணிகளும் நிறைவு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.