செய்தி வெளியீடு எண் :176, நாள் : 30.12.2017 அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாமில் 236 நபர்களுக்கு இணைப்பு ஆணைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்

செய்தி வெளியீடு எண் :176, நாள் : 30.12.2017 அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாமில் 236 நபர்களுக்கு இணைப்பு ஆணைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் 30.12.2017 அன்று நடைபெற்ற பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாமில் 
236 நபர்கள் ரூ. 15 இலட்சத்து 11 ஆயிரம்  இணைப்பு கட்டணமாக செலுத்தி, இணைப்பு ஆணைகளை மாநகராட்சி ஆணையாளர்  
திரு.ரெ. சதீஷ் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.  
 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை செயல்படுத்துவதற்காக   நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 23.2.2006-ல்   அரசு ஆணை எண் 60 (டி) வெளியிடப்பட்டது.  இவ்வரசாணையின்படி அரசு மானியமாக ரூ.10.00 கோடி,  மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் பங்குத்தொகையாக   ரூ.78.85  கோடி , தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (டி.என்.யு.டி.பி)  மூலம் கடன் தொகை 60.54 கோடி என மொத்தம் 149.39 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இப்பணிகள் 3 சிப்பங்களாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் சிப்பம் 1 ன் கீழ் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 34, 35, 38, 39, 40 மற்றும் 41 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டப்பணிகள் முடிக்கப்பெற்று , சோதனை ஒட்டத்திற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, 15.9.2017 அன்று சோதனை ஓட்டம்  துவங்கியது.
 
இந்நிலையில் பொதுமக்களிடம் கழிவு நீர் குழாய் இணைப்பிற்கு செலுத்த  வேண்டிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இணைப்புகளை உடனடியாக பொது மக்கள் பெறுவதற்கு ஏதுவாக, சிறப்பு முகாம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெறும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 30.12.2017 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 236  நபர்கள் ரூ. 15 இலட்சத்து 11 ஆயிரம் இணைப்பு கட்டணம் செலுத்தி, இணைப்பு ஆணையினை ஆணையாளரிடம் பெற்றுக் கொண்டனர். ஏற்கனவே 6 கோட்டங்களில் இதுவரை 707 வீடுகளுக்கு ரூ 45 இலட்சத்து 84 ஆயிரம்  கட்டணத்  தொகையாக  பெறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கோட்டம் எண் 34, 35, 38, 39, 40 மற்றும் 41  பகுதியினைச் சார்ந்த 943 நபர்களிடமிருந்து ரூ. 60 இலட்சத்து 95 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணமாக பெறப்பட்டுள்ளது. 
 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ் , உதவி ஆணையாளர் திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ்,  உதவி பொறியாளர்கள், திரு.ஜெ. ஒபுளி சுந்தர், திருமதி. ஆனந்தி , திரு. டி. தமிழ்ச்செல்வன் , உள்பட பலர்  கலந்து கொண்டனர்.