செய்தி வெளியீடு எண் :175, நாள் : 29.12.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் வணிக ரீதியிலான குடிநீர் இணைப்புகள் பெற்றவர்கள் நவீன அளவு மானிகளை பொருத்துவதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரும் நவீன அளவு மானிகளை பொருத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில்  வணிக ரீதியிலான குடிநீர் இணைப்புகள் பெற்றவர்கள் 20.11.2017 க்குள் நவீன அளவு மானிகள் (ளுஅயசவ ஆநவநசள)  பொருத்திட கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் நவீன அளவு மானிகளை பொருத்துவதற்கான காலக்கெடுவினை நீட்டிக்க கோரி வணிக நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை அளிக்கப்பட்டதன் அடிப்படையில், 30 நாட்கள் கால நீட்டிப்பு 19.12.2017 வரை  வழங்கப்பட்டது.  மேலும் வணிக ரீதியான குடிநீர்  இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு நவீன அளவு மானிகள் (ளுஅயசவ ஆநவநசள) பொருத்துவதற்கு சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடிதங்களும் வழங்கப்பட்டது. 
இந்நிலையில் இதுவரை நவீன அளவு மானிகள் (ளுஅயசவ ஆநவநசள)  பொருத்தாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, 05.01.2018 தேதி முதல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வணிக ரீதியான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதோடு, அபராதத் தொகையும் விதிக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.