செய்தி வெளியீடு எண் : 174, நாள் : 29 .12.2017 கேளிக்கை வரி செலுத்துவது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செய்தி வெளியீடு எண் : 174, நாள் : 29 .12.2017 கேளிக்கை வரி செலுத்துவது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள், திருமண மண்டபங்கள் உரிமையாளர்களுடன் கேளிக்கை வரி செலுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 28.12.2017 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 
 
தமிழ்நாடு அரசு,  உள்ளாட்சி அமைப்புகள் , கேளிக்கை மற்றும் பொழுது போக்கு இனங்களுக்கு  கேளிக்கை வரி விதித்தும் மற்றும் கேளிக்கை வரி வசூல் செய்வதற்கும் அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணையின்படி சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் திரையரங்குககள், கட்டணம் வசூலிக்கும்  பொழுது போக்கு பூங்காக்கள்,  கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படும் பொழுது போக்கு நிலையங்கள் (சுநஉசநயவiடிn ஊடரb) மற்றும்   கட்டணம் வசூலித்து நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றிற்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருமண மண்டபங்களில் கட்டண விதிப்புடன் நடைபெறும் கண்காட்சிகளுக்கும் கேளிக்கை வரி வசூலிக்கப்படும்.  
 
கேளிக்கை வரி செலுத்தும் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும்  மாநகராட்சியில் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.  மேலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு  மாநகராட்சியால் வழங்கப்படும் படிவம் ஓ  பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களுடன் , மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் படிவம் ஊ   யுடன்  இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். திரையரங்குகளில் விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டுகள் வகுப்பு வாரியாக வரிசை எண்  இடம் பெற்றுள்ளதை , மாநகராட்சி கேளிக்கை வரி அலுவலரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் பெற வேண்டும்.  மாநகராட்சி முத்திரையுடன் கூடிய நுழைவுச் சீட்டுகளை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி சீட்டாக திரையரங்கு உரிமையாளர்கள் வழங்கிட வேண்டும் என ஆணையாளர் அறிவுறுத்தினார். 
இக்கூட்டத்தில் உதவி ஆணையாளர் திரு.ப.ரமேஷ்பாபு, திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திரு.மு. கணேசன், திரு.கே.பி. கோவிந்தன், வருவாய் பிரிவு  அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.