செய்தி வெளியீடு எண் :172, நாள் : 28.12 .2017 பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக நிறைவுற்ற பகுதிகளில் புதிய இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் 30.12.2017 அன்று அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெறும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :172, நாள் : 28.12 .2017 பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக நிறைவுற்ற பகுதிகளில் புதிய இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் 30.12.2017 அன்று அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெறும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்  
சிப்பம் 1 ன் கீழ் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 34, 35, 38, 39, 40 மற்றும் 41 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 15.09.2017 அன்று  சோதனை ஒட்டம் நடத்தப்பட்டது. தற்போது தயாராக உள்ள 6 கோட்டங்களில் மட்டும் உத்தேசமாக  6,500 எண்ணிக்கையிலான வீடுகளுக்கு வீட்டிணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாணையின் படி பொதுமக்களிடம் கழிவு நீர் குழாய் இணைப்பிற்கு செலுத்த  வேண்டிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இணைப்புகளை உடனடியாக பொது மக்கள் பெறுவதற்கு ஏதுவாக 30.12.2017 அன்று காலை 10.00 மணி முதல் சிறப்பு முகாம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெறும். இம்முகாமில் இதுவரை புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் சொத்துவரி இரசீது நகலினை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே வைப்பு தொகை செலுத்தியிருந்தால் அந்த இரசீது தொகை நகலினை வைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்கூறிய 6 கோட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றம் வணிக வளாக பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஏற்கனவே தளஆய்வு மேற்கொண்டு செலுத்த வேண்டிய வைப்பு தொகை, மதிப்பீட்டுக் கட்டணம் தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துள்ளார்கள். விண்ணப்பித்த உடனேயே பயனீட்டு கட்டணம், வைப்பு தொகை, விண்ணப்ப கட்டணம், மேற்பார்வை மற்றும்
 சாலை பராமரிப்பு கட்டணம், கட்டுமான செலவினத் தொகைகள் உட்பட செலுத்த வேண்டிய அனைத்து கட்டண விவரங்களும் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். உரிய கட்டணங்களை செலுத்திய பின் உடனடியாக இணைப்புகள் வழங்கப்படும். அதன்படி கீழ்க்கண்ட கட்டணங்களை மாநகராட்சிக்கு விண்ணப்பதாரர்கள் செலுத்திட வேண்டும். 
வ. 
எண் கட்டிடப் பரப்பளவு
(சதுர அடியில்) பயனீட்டுக் கட்டணம்
மாதம் ஒன்றுக்கு ரூ வைப்புத் தொகை ரூ .
குடியிருப்பு உபயோகம் குடியிருப்பில்லாத உபயோகம் குடியிருப்பு உபயோகம் குடியிருப்பில்லாத உபயோகம் 
1. 500 வரை 65 130 4000 8000
2. 501 முதல் 1200 வரை 75 225 6500 19500
3. 1201 முதல் 2400 வரை 90 270 10000 30000
4. 2401 மேல் 100 500 14000 70000
5. சிறப்பு இனங்கள் (அடுக்குமாடி வீடுகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள், பொது கட்டிடங்கள், வணிக வளாகங்கள் முதலியவை ) 120 600 25000 125000
 
வ.
எண் அளவு விண்ணப்ப கட்டணம்
ரூ. மேற்பார்வை கட்டணம் மற்றும் சாலைபராமரிப்பு கட்டணம்
ரூ பைப் சாமான்கள் கட்டுமான பொருள் மற்றும் கூலி
ரூ மொத்தம்
ரூ
1. 0 மீ முதல் 3 மீ வரை 50 /- 1252 /- 4288 /- 5540 /-
2. 3 மீ முதல் 6 மீ வரை 50 /- 2181 /- 5249 /- 7430/-
3. 6 மீ முதல் 9 மீ வரை 50 /- 3109 /- 6211 /- 9320/-
4. 9 மீ முதல் 12 மீ வரை 50 /- 4029 /- 7171 /- 11200/-
5. 12 மீ முதல் 15 மீ வரை 50 /- 4968 /- 8132 /- 13100/-
 
எனவே 30.12.2017 அன்று நடைபெறும் இச்சிறப்பு முகாமில் இதுவரை வைப்புத் தொகை செலுத்தாத  பொது மக்கள் பாதாள சாக்கடை திட்ட
 வீட்டு இணைப்புகள் பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களை உடனடியாக செலுத்தி, இத்திட்டத்தில் இணைந்திட வேண்டும் என மாநகராட்சி  ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.