செய்தி வெளியீடு எண்.171, நாள்: 23.12.2017 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கு ஏதுவாக 9 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலான இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் பார்வையிட்டார்.

செய்தி வெளியீடு எண்.171, நாள்: 23.12.2017 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கு ஏதுவாக 9 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலான இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் பார்வையிட்டார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில்  திடக்கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கு ஏதுவாக ரூபாய் 9 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 4 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை
ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் 23.12.2017 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பார்வையிட்டார். 
சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் திடகழிவு மேலாண்மை பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 350 முதல் 400 மெட்ரிக் டன் வரையிலான திடகழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  வீடுகள்,  வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்டும் திடகழிவுகளை அங்கேயே தரம் பிரித்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தங்களது பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் திடகழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்க ஏதுவாக பச்சை மற்றும் நீல நிற கூடைகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பொது மக்களிடமிருந்து திடகழிவுகளை நேரடியாக சென்று வாங்குவதற்கு ஏதுவாக 1 அடுக்கு கொண்ட மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள்  பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியின் கீழ் 20 இலட்சம் மதிப்பீட்டில் 10 வாகனங்கள் ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாகனங்களுக்கு பொதுமக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினை தொடர்ந்து கூடுதலாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூபாய் 9 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 4 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேவைகேற்ப அனைத்து பகுதிகளுக்கும் இவ்வாகனங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சேலம் மாநகராட்சியினை தூய்மையான மாநகராட்சியாக பராமரிப்பதற்கு ஏதுவாக இது போன்ற  தொடர்நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் திடகழிவுகளிலிருந்து தரம் பிரிக்கப்படும் உலர்கழிவுகளை முறையாக அப்புறபடுத்துவதற்கு ஏதுவாக உலர் கழிவு சேகரிப்பு மையங்கள் அனைத்து மண்டலங்ளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 14 தொங்கும் பூங்கா வளாகத்தில் உலர்கழிவு சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
          இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் திரு.வி.பிரபாகரன், சுகாதார ஆய்வாளர்  திரு. பிரகாஷ் உட்பட  பலர் கலந்து கொண்டனர் .