செய்தி வெளியீடு எண்.170, நாள்: 23.12.2017 சேலம் மாநகராட்சி செவ்வாய் பேட்டை பகுதியில் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

செய்தி வெளியீடு எண்.170, நாள்: 23.12.2017 சேலம் மாநகராட்சி செவ்வாய் பேட்டை பகுதியில் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

  சேலம் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு மாமன்ற தீர்மானம் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்பதற்கு தேவையான விழிப்புணர்வு பணிகள் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வணிக நிறுவனங்கள் தடைசெய்யப்பப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என தகுந்த அறிவுரைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
இதனிடையே 23.12.2017 அன்று சூரமங்கலம் மண்டலம்கோட்டம் எண் 28 லாங்கிலி சாலை, செவ்வாய் பேட்டை மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் உத்திரவின் பேரில் மாநகர் நலஅலுவலர் மருத்துவர் .வி.பிரபாகரன் திடீர் தணிக்கை மேற்கொண்டார். இத்தணிக்கையின் போது தடைசெய்யப்பட்ட 600 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வு செய்த ஆணையாளர் இனி வருங்காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 
 
          இவ்வாய்வின் போது மாநகர் நல அலுவலர் திரு.வி.பிரபாகரன், சுகாதார ஆய்வாளர்  திரு. பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.