செய்தி வெளியீடு எண் : 169, நாள் : 21 .12.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 23 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்.

செய்தி வெளியீடு எண் : 169, நாள் : 21 .12.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 23 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில்  தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் 21 கோட்டங்கள் தவிர்த்து, மாநகராட்சி சார்பில்  39 கோட்டங்களில்  துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 39 கோட்டங்களில் 4 சுகாதார அலுவலர்கள் மற்றும் 9 சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பின் கீழ் , 680 ஆண் துப்புரவு பணியாளர்கள், 457 பெண் துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 1137 துப்புரவு பணியாளர்கள் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இவர்களின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும்  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.  
 
அதனடிப்படையில் 1137 மழை கோட், 680 காலுறைகள் ( ஆண் துப்புரவு பணியாளர்களுக்கு மட்டும்) , 1137 முகவுரைகள், 1137 பாதுகாப்பு தொப்பிகள், 1137 கையுறைகள், 1137 ஒளி பிரிதிபளிக்கும் மேலாடைகள் என 6 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் ரூ. 23 இலட்சத்து 9 ஆயிரத்து 149 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, 20.12.2017 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்களால் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அனைத்து பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள்‘, முழுமையாக வழங்கப்பட்டுள்ள  நிலையில் , பணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைவரும் இவ்வுபகரணங்களை பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும் எனவும், பயன்படுத்திய பின்னர் தூய்மையாகவும் பராமரிக்க  வேண்டும் எனவும் ஆணையாளர் துப்புரவு பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், உதவி ஆணையாளர்கள் திரு.ப. ரமேஷ்பாபு, திரு.மு. கணேசன், திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ்,  திரு.கே.பி. கோவிந்தன் , மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.