செய்தி வெளியீடு எண் : 166, நாள் : 17.12.2017 தூய்மை இந்தியா திட்டம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

செய்தி வெளியீடு எண் : 166, நாள் : 17.12.2017 தூய்மை இந்தியா திட்டம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் திடகழிவுகளை தரம் பிரித்து, நீலம் மற்றும் பச்சை கூடைகளில் வழங்கிடவும், பொது இடங்களில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறைகள் பயன்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களிடையே தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழப்புணர்வு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் பொருட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி 17.12.2017 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி மாநகராட்சி மைய அலுவலகத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் சென்றடையும், இப்பேரணியில் 70-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு. அ.அசோகன், திரு. ஆர். ரவி, மாநகர் நல அலுவலர் திரு. வி. பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் திரு. கே. கணேசன், திரு.கே.பி. கோவிந்தன், திரு. ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திரு. பி. ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர்கள்,  சுகாதார அலுவலர்கள் மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.