செய்தி வெளியீடு எண் : 165, நாள் : 13.12.2017 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை பயன்பாட்டின் அவசியத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் தனி நபர் கழிப்பிடம் மாதிரி மற்றும் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் : 165, நாள் : 13.12.2017 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை பயன்பாட்டின் அவசியத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் தனி நபர் கழிப்பிடம் மாதிரி மற்றும் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் சுகாதார மேம்பாட்டு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக மாநகர பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு விழிப்புணர்வு பணிகளை தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள 30 பரப்புரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி 1 ஒருங்கிணைப்பாளர் மற்றும் 4 மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பின் கீழ் பரப்புரையாளர்கள் சென்று, பொதுமக்களிடம் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கழிப்பிடங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி வருகின்றனர்.  
இந்நிலையில் பொதுமக்களுக்கு தனி நபர் கழிப்பிடங்கள் பயன்படுத்துவது குறித்த, விழிப்புணர்வினை எளிதாக தெரிவிக்கும் வண்ணம், மாநகராட்சி  நிர்வாகத்தின் சார்பில் தனி நபர் கழிப்பிடம் மாதிரி மற்றும் விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இம்மாதிரி வாகனத்தில் மாதிரி கழிப்பிடம் அமைக்கப்பட்டு, கழிவறை பயன்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் , திறந்த வெளியில் மலம் கழித்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விவரங்கள் பிளக்ஸ்  போர்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் சுகாதார மேம்பாடுகளை கடைபிடிப்பதற்கு தேவையான விழிப்புணர்வு வாசகங்களும் பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  இம்மாதிரி வாகனம் மூலம் மாநகர பகுதி முழுவதும் தனி நபர் கழிப்பிட பயன்பாடு குறித்த  விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் தனி நபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு தேவையான விண்ணப்பங்களும் இம்மாதிரி வாகனத்தில்  விநியோகம் செய்யப்படும். அதனை பூர்த்தி செய்து இம்மாதிரி வாகனத்திலேயே வழங்கலாம்.  
மேலும் தனி நபர் கழிப்பிடங்களை புதிதாக அமைக்க  விரும்புபவர்கள் மாநகராட்சி மைய அலுவலகம், சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சுகாதார அலுவலர் / ஆய்வாளர் அலுவலகங்களிலும்,  தூய்மை இந்தியா விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வரும் பரப்புரையாளர்களிடமும் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து, விண்ணப்பம் வழங்குபவர்களிடமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கிடலாம். மேலும் அரசு மான்ய உதவியுடன் வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துக் கொள்ளலாம். தனி நபர் கழிப்பிடம் கட்டுவதற்கு   ரூ.12 ஆயிரம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 8 ஆயிரம் அரசால் மான்ய  தொகையாக வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு முன்வர வேண்டும். ஏற்கனவே குடியிருப்புகளில் கழிப்பறைகளை கட்டி பயன்படுத்துபவர்கள் கழிவறை கழிவுகளை மழை நீர் மற்றும் சாக்கடைகளில் கலப்பதை தவிர்த்து,  தங்களது வீடுகளிலேயே நச்சு  தொட்டி (ளுநயீவiஉ கூயமே) அமைத்து , சேலம் மாநகராட்சி தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஜி. காமராஜ், உதவி ஆணையாளர்கள் திரு.மு. கணேசன், கே.பி. கோவிந்தன், திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.