செய்தி வெளியீடு எண் :160 நாள் : 30.11 .2017 பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 30.11.2017 அன்று திறந்து வைத்தார்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 24 ல் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்தில் 2 வது நடைமேடையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக புதிய ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலகத்தை 30.11.2017 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  திறந்த வைத்து , முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் ஆவின்  பொது மேலாளர்  மரு. எஸ். சங்கீதா, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் திரு. ஆர். சின்னுசாமி , செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், துணைப்பதிவாளர் (பால்வளம்) திரு.எம். ராஜா , துணை பொது மேலாளர் (விற்பனை) மரு. ஜி.ஆர். பழனிசாமி , உதவி செயற்பொறியாளர் திருமதி. வி. திலகா , சுகாதார ஆய்வாளர் திரு.வி. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.