செய்தி வெளியீடு எண் :159 நாள் : 30.11 .2017 மாவட்ட அளவிலான தேசிய தேர்தல் வினாடி வினா போட்டிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 30.11.2017 அன்று துவக்கி வைத்தார்.

செய்தி வெளியீடு எண் :159 நாள் : 30.11 .2017 மாவட்ட அளவிலான தேசிய தேர்தல் வினாடி வினா போட்டிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 30.11.2017 அன்று துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைகளின் படி 14 வயது முதல் 17 வயதுடைய பள்ளி மாணவ, மாணவர்களிடையே தேர்தல் நடைமுறைகள் குறித்த வினாடி வினா போட்டிகள்  நடத்துவதற்கு,  கல்வித்துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.  முதல் கட்ட அளவில் 17.11.2017 அன்று  70 பள்ளிகளில் நடத்தப்பட்டு, 1 பள்ளிக்கு இருவர் வீதம் 140 மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இரண்டாம் கட்டமாக மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிகள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்களால்  30.11.2017 அன்று அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 12 ல் உள்ள புனிதபால்  மேல் நிலைப் பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டது.  இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் மூன்றாம் கட்டமாக மாநில அளவில் நடைபெறவுள்ள வினாடி வினா போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.  மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள்,  தேசிய அளவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு , 25.01.2018 அன்று புது டெல்லியில் நடைபெறும் “தேசிய வாக்காளர் தினத்தன்று” பாராட்டப்படுவார்கள்.  

இப்போட்டிகளை துவக்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பங்கு கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பி. குமரேஷ்வரன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி. அ. ஞான கௌரி, தனித்துணை வட்டாட்சியர் (தேர்தல்) திரு.டி. தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.