செய்தி வெளியீடு எண் :158 நாள் : 29.11 .2017 சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும் தனிக் குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் உந்து நிலையங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

செய்தி வெளியீடு எண் :158 நாள் : 29.11 .2017 சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும் தனிக் குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் உந்து நிலையங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு  குடிநீர் வழங்கி வரும் தனிக் குடிநீர் திட்டம்,  நங்கவள்ளி குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் உந்து நிலையங்களில்   மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 29.11.2017 அன்று ஆய்வு மேற்கொண்டார். 

  சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் 103 மில்லியன் லிட்டரும், நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 10 மில்லியன் லிட்டர் என நாளொன்றுக்கு 113 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு  வருகிறது.  சேலம் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து,  குடிநீர் வழங்கல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தி, மாநகர பொது மக்கள்  அனைவருக்கும் நாள் 1 க்கு தேவையான குடிநீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.  மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான வகையில் குடிநீர் வழங்கிடும் பொருட்டு, ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் திரவ வடிவிலான குளோரின் செலுத்தும் திட்டத்தின் மூலம் 4 மண்டலங்களுக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள 57 குடிநீர்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் சேலம் - மேட்டூர் நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நங்கவள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தினை ஆய்வு செய்த ஆணையாளர்,  சேலம் தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் கோம்புரான் காட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து  நிலையம் மற்றும்  கருமலைக்கூடலில் நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையத்தையும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து   மேட்டூர் தொட்டில் பட்டியில் உள்ள நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  ஆய்வு செய்த ஆணையாளர் மேட்டூர் அணைப்பகுதியில் உள்ள ஏ.வி.  ராமன் வால் டவர் மூலம் மேற்கொள்ளப்படும் நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார். மேற்கூரிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலைய வளாகங்களை தூய்மையாக பராமரிக்கவும், பணி நேரங்களில் கவனத்துடனும், பாதுகாப்புடனும் பணியாற்றும் படி சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார்.  

இவ்வாய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆர். வைத்தியநாதன் இ.ஆ.ப., செயற்பொறியாளர் திரு.அ.அசோகன், உதவி பொறியாளர் திரு.டி. நடராஜன்   ஆகியோர் உடன் இருந்தனர். 

 

வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.