செய்தி வெளியீடு எண் :157 நாள் : 25.11 .2017 மரவனேரி ஓடை பகுதியில் எக்ஸ்கவேட்டர் என்ற புதிய இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

செய்தி வெளியீடு எண் :157 நாள் : 25.11 .2017 மரவனேரி ஓடை பகுதியில் எக்ஸ்கவேட்டர் என்ற புதிய இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 14 மரவனேரி ஓடை  பகுதியில் புதிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ள எக்ஸ்கவேட்டர் என்ற இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் தொடர்பான செயல்விளக்கப் பணிகளை 25.11.2017 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார். 

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்   நீர் வரத்து ஒடைகள், சாக்கடை கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாக்கடைகள் தூர்வாருதல், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான மண் வெட்டும் பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு தற்பொழுது ஜெ.சி. பி. இயந்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொழுது, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கையினை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.  அதனடிப்படையில்  ஜப்பானைச் சேர்ந்த குபேட்டா மினி  – எக்ஸ்கவேட்டர் என்ற இயந்திரத்தை பயன்படுத்தி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  இவ்வியந்திரம் சிறிய அளவில் உள்ளதாலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் எளிதாக சென்று  சாக்கடை கால்வாய்களை தூர்வாருவதற்கும் , பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிப்பு மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு தேவையான அளவிற்கு இவ்வியந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இவ்வியந்திரம்  எளிதாக கையாளக் கூடிய வகையிலும் 20 லிட்டர் டீசல் கொள்ளளவு கொண்டதாகவும் உள்ளது. 1 மணி நேரத்திற்கு 2 லிட்டர் டீசல் வீதம், 10 மணி நேரத்திற்கு இவ்வியந்திரத்தை தொடர்ந்து இயக்கிட முடியும்.  சிறிய , பெரிய கால்வாய்கள் போன்றவற்றில் பணிகள்  மேற்கொள்ள ஏதுவாக, இவ்வியந்திரத்தை அகலப்படுத்தவும், சுருக்கிக் கொள்ளவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  பராமரிப்பு செலவினங்கள் குறைந்த அளவிலே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதி  பெற்று, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இவ்வியந்திரத்தை கொள்முதல் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையினை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும்  என ஆணையாளர் தெரிவித்தார். 
 
இவ்வாய்வின் போது உதவி செயற்பொறியாளர் திரு.கே. செந்தில்குமார், திரு. எம். செல்வராஜ் , உதவி பொறியாளர் திரு. என். சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.