Latest News

ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தமிழ¦நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகள¦ மேற¦கொள¦ள உள¦ளதால¦  நங்கவள¦ளி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெற¦று வரும் சேலம் மாநகராட்சி  சூரமங்கலம் மண்டலத்திற¦குட்பட்ட கோட்டம் எண் 20,21,22,  25 ல்  (ஒரு பகுதி) மற¦றும் கொண்டலாம்பட்டி மண்டலத்திற¦குட்பட்ட கோட்டம் எண் 50,51 மற்றும் 52 ஆகிய  பகுதிகளுக்கு  (31.7.2017) அன¦று (திங்கள்கிழமை) ஒரு நாள¦ மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால்   பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ்  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

Commissioner - Dengue Awareness Campaign

டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி தனி அலுவலர் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  தலைமையில் (21.7.2017) அன்று  மணக்காடு காமராஜர் மேல் நிலைப்பள்ளியில் எடுத்துக் கொள்ளப்பட்டது.     பருவ நிலை மாற்றத்தால் சேலம் மாநகர பொது மக்கள் நலன் கருதி, டெங்கு தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் பொது மக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பள்ளி மாணவ , மாணவியர்கிளைடையே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் வெளியிடப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 21.7.2017 அன்று மணக்காடு மேல் நிலைப்பள்ளியில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுக்கள் உருவாகும் முறை, மற்றும் டெங்கு தடுப்பு முறைகள் குறித்த விளக்கங்கள் ஆணையாரால்  மாணவ, மாணவியகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவியர்  அவர்களது பெற்றோர்களிடம் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கும், டெங்கு பரவாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிப்பதற்கு ஏதுவாக, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் , துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத்தெளிப்பான்கள்  மூலம் மருந்து மருந்து தெளிப்பு பணிகள் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் குடிநீரை சேகரித்து வைத்திருக்கக்கூடிய பிளாஸ்டிக் டிரம்கள், சிமெண்ட் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் ஆகியவற்றை உரிய கால இடைவெளியில் சுத்தப்படுத்தி பயன்படுத்திட அறிவுறுத்துதல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படாத நிலையில் உள்ள பிற பொருட்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்திட கேட்டுக்கொள்ளுதல் போன்ற பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தினந்தோறும் அனைத்து கோட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் மரு.பி.ஆர். முரளி சங்கர் ,  தாய்சேய் நல அலுவலர் திருமதி என்.சுமதி,  பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு டெங்கு தடுப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்  

Read More