Latest News

செய்தி வெளியீடு எண் :28,நாள் : 12.02.2018 சேலம் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்தநாள் பேரணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்தில் 12.02.2018 அன்று துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சார்லஸ்  ராபர்ட் டார்வின் பிறந்தநாள் பேரணியினை, மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ் அவர்கள் மாநகராட்சி தொங்கும் பூங்கா வளாகத்தில் 12.02.2018 அன்று துவக்கி வைத்தார்.   பிப்ரவரி 12 1809 ஆம் ஆண்டில் பிறந்த சார்லஸ் ராபர்ட் டார்வின் இயற்கையியல் அறிஞர் ஆவார்.  இவர் முன்வைத்த உயிரினங்களின் படி வளர்ச்சிக் கொள்கை, ஒரு அடிப்படையான கொள்கையாகும்.  இவர் கண்டு பிடித்த உண்மைகளின் கொள்கைகளையும் , உயிரினங்களின் தோற்றம் (கூhந டீசபin டிக ளுயீநஉநைள) எனும் தலைப்பில் 1859 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.  உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சி என்பது தகுதியானது உயிர் வாழும் (ளுரசஎiஎயட டிக வாந குவைவநளவ) என்ற கோட்பாட்டினை சார்லஸ் ராபர்ட் டார்வின் அவர்கள் கண்டறிந்தார்.  இவரது 209 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவியர்களிடையே அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், பேரணி துவக்கி வைக்கப்பட்டது.  பின்னர் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் சார்லஸ் ராபர்ட் டார்வின் தின கருத்துரைகளும் , எளிய அறிவியல் பரிசோதனைகளும் மாணவியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.    இப்பேரணி  தொங்கும் பூங்கா வளாகத்திலிருந்து,  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வழியாக மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் சென்றடைந்தது.  அரசு  கோட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளியைச் சார்ந்த  150 க்கும் மேற்பட்ட மாணவியர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.   இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள்  திரு.அ.அசோகன், திரு.ஆர். ரவி, சேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த  திரு.  டி. ஜெயமுருகன், திரு. டி.திருநாவுக்கரசு, திரு.ஆர்.கே. லால், செல்வி எஸ். திவ்யா , திரு.ஜெ. பரத்குமார் சுகாதார அலுவலர்கள் திரு.கே. ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் திரு. எஸ். சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

Read More

செய்தி வெளியீடு எண் :26,நாள் : 09.02.2018 பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.6.75 இலட்சம் மதிப்பீட்டில் 3 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 43 சின்ன மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள  வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை பெறுவதற்கு ஏதுவாக, பல்லவன் கிராமவங்கியின் சார்பில் பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.6.75 இலட்சம் மதிப்பீட்டில் 3  இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை 09.02.2018 அன்று மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ் அவர்கள் வழங்கினார்.     தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை மேலாண்மை செயலாக்கப்பணிகள் மாநகராட்சி பகுதி முழுவதும் , தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   குறிப்பாக வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை , பொதுமக்களே தரம் பிரித்து இரு வண்ண கூடைகளில் வழங்குவதற்கு ஏதுவாக, இருவண்ணக் கூடைகளும் , அப்பகுதி முழுவதும் சேகரமாகும் திடக்கழிவுகளை கொண்டு செல்வதற்கு, இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களும் கோட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நடவடிக்கையின் மூலம் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்குவதோடு மட்டுமல்லாமல், தெருக்களில் குப்பைகள் தேங்காத நிலை உருவாகி வருகிறது.  இதனால் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்களில் தேவையற்ற பொருட்களை போடுவது தடுக்கப்படுகிறது.  இதன் மூலம் நோய்கள் உருவாகாத சூழ்நிலையும் ஏற்படுத்தப்படுகிறது.     மேலும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை  செயலாக்கப்பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதால்,  திடக்கழிவுகள் முறையாக கையாளப்பட்டு வருகிறது.  மேலும் அனைத்து கோட்டங்களுக்கும்  இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.  சுகாதாரமான சூழலை உருவாக்கினால் தான், எதிர் கால சந்ததியினர் சுகாதாரமான சூழலில் வாழ முடியும் என்பதை கருத்தில் கொண்டு, சுகாதார மேம்பாட்டிற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் திரு. ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ் , மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், பல்லவன் கிராம வங்கியின் முதன்மை மேலாளர் திரு.சிவக்குமார், பொதுமேலாளர் திரு. சந்தோஷ்குமார் , மேலாளர் திரு. சண்முகம், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Read More