சேலம் மாநகராட்சி நவீன இறைச்சிக்கூடம்

சேலம் மாநகராட்சி 50வது கோட்டம் மணியனூர் பகுதியில் நவீன இறைச்சிக் கூடம் கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 68.00 லட்சம் மதிப்பீட்டு தயார் செயப்பட்டு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் கடிதம் எண். 11183/07 தேதி 21.05.2007 ல் நிர்வாக அனுமதி பெறப்பட்டது. (2006-2007 பகுதி இரண்டு திட்ட அரசு மானியம் ரூ.10.00 லட்சமும் மாநகராட்சி பொது நிதி ரூ.58.00 லட்சமும் ஆகும்). மேற்படி கட்டிடத்தின் பரப்பளவு 2286 சதுரடி மற்றும் ஆடுகள் தங்குமிடம் கட்டிடத்தின் பரப்பளவு 1056 சதுரடி ஆகும். இந்த புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடத்தில் கிழ்கண்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடுகள் தங்குமிடம்,. ஆடுகள் வெட்டுமிடம் - 6 எண்ணிக்கை,ஆடுகள் ஆய்விடம்
ஆடு மாமிசம் உண்ணத் தகுந்தவை என முத்திரையிட்டு வழங்குதல், தோல் சேகரிப்பு அறை
இறைப்பை குடல் சேகரிப்பு அறை, கால்நடை மருத்துவர் அறை, சூரிய ஒளியை பயன்படுத்தி சுடுநீர், குடிநீர் வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மோட்டார் அறை
       மேலும் கூடுதல் வசதிக்காக ரூ. 31.25 லட்சம் மதிப்பீட்டில் கிழ்கண்டுள்ள பணிகள் மாநகராட்சி பொது நிதியிலிருந்து  மேற்கொள்ளப்பட்டது.
கழிப்பிட வசதி (ஆண்/பெண்), பாதுகாவலர் அறை, சுற்றுச்சுவர், கான்கிரிட் இன்டர் லாக்கிங்
பிளாக் சாலை, புல்தரை, பூச்செடி, மரம், இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடம்
       நவீன இறைச்சிக்கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 ஆடுகள் வரை வெட்டுவதற்கும் ஆடுகளை வெட்டுவதனால் வரக்கூடிய கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு 2 லட்சம் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பையோ ஓசோலைட் டெக்னாலஜி (Bio-Ozolyte Technology) என்ற நவீன முறையை பயன்படுத்தி சுத்திகரிப்பு செய்திட வழி வகை செயப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முழுமையடைந்து 07.07.10 முதல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மொத்த செலவுத் தொகை ரூ.94.00 லட்சம்