Integrated Housing and Slum Development Programme

ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
மொத்த மதிப்பீடு ரூ. 1558.24 இலட்சம்

சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் 113 அங்கிகரிக்கப்பட்ட குடிசை பகுதிகள் உள்ளன. மேற்படி குடிசைச் சார்ந்த பகுதிகளை குடிசைகளே இல்லாத நகரமாக உருவாக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், (Integrated Housing and Slum Development Programme – IHSDP) சேலம் மாநகராட்சியில் முதற் கட்டமாக 12 குடிசைப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கிழ்கண்டுள்ள விபரப்படி தனிக்குடியிருப்புகள் கட்டுதல், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


எண்
பணியின் விபரம் பணிகளின்
எண்ணிக்கை
மொத்த மதிப்பீடு 
(ரூ.இலட்சம்) 
அரசு மான்யம் (ரூ.இலட்சம்) 
மத்திய அரசு பங்களிப்பு மாநில அரசு பங்களிப்பு
மொத்தம்
(ரூ.இலட்சம்)
1. தங்க குடியிருப்புகள் கட்டுதல் 1006 1026.12 643.84 382.28 1026.12
2. அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு பணிகள்  77 532.12 282.42 249.70 532.12
  மொத்தம்  1083 1558.24 926.26 631.98 1558.24


மேற்படி திட்டத்தில் தனிக்குடியிருப்புகள் கட்ட ஒவ்வொரு குடியிருப்பிற்கும் மத்திய அரசு மான்யம் ரூ. 64,000 மாநில அரசு மான்யம் ரூ. 8,000 மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ரூ. 30,000 என்ற விகிதத்தில் ஆக மொத்தம் ரூ. 1.02,000 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது 1006 பயனாளிகளுக்கு தனிக் குடியிருப்புக்கள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி திட்டத்தில் முதற் கட்டமாக அரசு மான்யம் ரூ. 628.22 இலட்சம் பெறப்பட்டு மேற்படி திட்டத்தில் முதற் கட்டமாக அரசு மான்யம் ரூ. 628.22 இலட்சம் பெறப்பட்டு மேற்படி தொகையில் 645 பயனாளிகளுக்கு தனிக் குடியிருப்புகள் கட்டும் பணியில் வெவ்வேறு நிலைகளில் நாளது தேதி வரை ரூ. 300.60 இலட்சம் செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள குடியிருப்புகள் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடைய உள்ளன.

        மேலும் மேற்படி குடிசைப் பகுதிகளில் 77 எண்ணிகையில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை அரசு மான்யம் ரூ. 512.12 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்டு முதல் கட்டமாக 29 எண்ணிகையில் ரூ. 239.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 48 பணிகளான குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் குழாய் இணைப்புகள் ஆகியன விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்பட மாநகராட்சி மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள்

1.மேற்படி திட்டத்தில் தனிக்குடியிருப்புகள் கட்டும் பயனாளிகளுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்திலும், சுலப தவணையிலும் முதல் கட்டமாக ரூ. 20,000 வரை அரசுடைமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்களுடன் கலந்த்தாலோசித்து கடன் வழங்க ஏற்பாடு செயப்பட்டுள்ளது.

2.பயனாளிகளுக்கு தனிக்குடியிருப்புகள் கட்ட சிமெண்ட் மூட்டைகள் அரசு நிர்ணய விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3. பயனாளிகளை சுய உதவிக்குழு உறுப்பினர்களாக்கி ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4.பயனாளிகளிடம் கல்வி, மருத்துவம் பற்றிய விழ்ப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.