நவீன எரிவாயு தகன மேடை

மாண்புமிகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் 2006-07ம் ஆண்டு சட்டப் பேரவை அறிவிப்பின் அடிப்படையில் பகுதி - II திட்டத்தின் கீழ் "நவீன எரிவாயு தகன மேடை" அமைத்திட 11.09.2006ம் தேசிய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கும் துறையின் 90 எண் கொண்ட அரசாணையின் மூலம் அனுமதியளித்ததின் அடிப்படையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டம் எண். 12 ல் அமைந்துள்ள காக்காயன் மயானத்தில் அரசு மானியம் ரூ. 20.00 இலட்சம் மற்றும் மாநகராட்சியின் பொதுநிதியின் பங்களிப்பு ரூ. 78.00 இலட்சம் ஆக மொத்தம் ரூ. 98.00 இலட்சம் மதிப்பீட்டில் "நவீன எரிவாயு தகன மேடை"  ("B" Type) அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. 23.06.07ம் தேதியன்று அதற்கான தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு, 07.09.07ல் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு 26.10.07ல் பணி ஆணை வழங்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு 07.07.2010 முதல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தில் கீழ்கண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
1. தகன மேடை - 2 எண்ணிக்கை, அஞ்சலி மண்டபம், மர இருப்பு அறை, ஜெனரேட்டர் அறை அலுவலக அறை, முடி எடுக்கும் இடம், கழிப்பிட வசதி, சாலை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதி, வாகனங்கள் சுத்திகரிப்பு நிலையம், காரிய மண்டபம், சுற்றுச் சுவர், அமைவிடத்தில் தேவையான காலி இடங்களில் புல் தரை மற்றும் பூங்காக்கள் அமைத்தல்.

     இதில் தனியார் பங்களிப்பாக சேலம் ஜெயராம் கல்வி அறக்கட்டளை மற்றும் வைஷியா கல்லூரி ஆகியவற்றின் சார்பாக அஞ்சலி மண்டபம் ரூ. 15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

எரிவாயு தகன மேடை அமைதி அறக்கட்டளையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
         

மொத்த செலவுத் தொகை ரூ. 234.04 இலட்சம்