UGD Project

UNDER GROUND DRAINAGE PROJECT

The Tamil Nadu Government has sanctioned a new Under Ground Drainage Project for Salem City at an estimated cost of Rs149.39 Crores vide G.O. No.63(D) M.A & W.S. Department dated 23.2.2006.

As advised by the Honourable Minister for Local Administration and Honourable Minister for Agriculture, it is proposed to construct four numbers of Sewage Treatment Plants within the City itself with the an advanced technology, relevant DPR and detailed estimate are being prepared by the Technical Consultants .

பாதாள சாக்கடை திட்டம்
சேலம் மாநகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆணை எண் 60 (டி), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் (ந.நி.3) துறை, நாள் 23.2.2006ல் ரூ.149.39 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. மேற்படி அரசாணையில் இத்திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரத்தினை தமிழ்நாடு அடிப்படை வசதிகள் உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெற்று செயல்படுத்த கீழ்க்கண்டவாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நிதி ஆதாரம்

1. அரசு மானியம்/டி .என்.யூ.டி.பி III - ரூ 10 .00 கோடி
2. மாநகராட்சி மற்றும் பொது மக்களின் பங்கு தொகை - ரூ 78.85 கோடி
3. கடன் (டி.யூ.டி.பி III) - ரூ 60.54 கோடி
மொத்தம் - ரூ 149.39 கோடி


மேற்படி திட்டத்தில் பாதாள சாக்கடை பணிக்கான குழாய் பதிக்கும் நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களால் தொழில்நுட்ப அனுமதி 28.06.07 பெறப்பட்டது. உலக வங்கி நிறுவனமான டிஎனயுபி ஒப்பந்தப்புள்ளி நமூனாவிற்கு 09.10.07 ல் ஆட்சேபணை இன்மை சான்று பெறப்பட்டது. பணிநிறைவேற்ற கிழ்க்கண்ட தேதிகளில் ஒப்பந்தப்புள்ளிகளில் கோரப்பட்டது.

   பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணிக்கான மூன்று பேக்கேஜ்களுக்கும் நான்கு முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் வரப்பெறவில்லை என்பதால் ஐந்தாம் அழைப்பு 20.08.10ல் கோரப்பட்டதில் வரப்பெற்ற நான்கு ஒப்பந்தப்புள்ளிகளில் பேக்கேஜ் -1 மற்றும் 3வது  பேக்கேஜ்களுக்கும் தொழில் நுட்ப தகுதி வாய்ந்த Ms.PSVCPL-BBIPL-(JV) ஹைதராபாத் நிறுவனத்திற்கு பணிஆணை வழங்கி பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    பேக்கேஜ் 2க்கான ஒப்பந்தப்புள்ளி அழைப்பு 6 முறை கோரியும் தகுதி வாய்ந்த ஒப்பந்தப்புள்ளி வரப்பெறாததால் 7ம் அழைப்பு 24.06.10ல் பெறப்பெற்ற  இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளின் தொழில் நுட்ப தகுதிகள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தகுதியான ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் (DBOPT)
     பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க உத்தசிக்கப்பட்டுள்ள இடங்கள்
1 ) வெள்ளக்குட்டை 2 ) வண்டிப்பேட்டை 3 ) மான்குட்டை 4 ) அணைமேடு ஆகும். மேற்படி நான்கு இடங்களில் வெள்ளக்குட்டை, வண்டிப்பேட்டை மற்றும் அணைமேடு ஆகிய மூன்று இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் DBOPT முறையில் அமைத்திட ஒப்பந்தபுள்ளிகள் 10.02.10ல் வரவேற்பப்பட்டதில் மூன்று பேக்கேஜ்களுக்கும் வரப்பெற்ற 37 ஒப்பந்தபுள்ளிகள் நிறுவனங்களின் தொழில் நுட்ப தகுதிகள் ஆய்வு செய்திடும் பணியினை தமிழ்நாடு தண்ணீர் முதலீட்டு கழகம் சென்னை அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளிகளை நகராட்சி நிர்வாக தொழில் நுட்ப நிலை குழு கூட்டத்தில் வைத்து முடிவு பெறப்பட்டு, உலக வங்கியுன் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதால் மேற்படி மூன்று பேக்கேஜ்களுக்கான பணிகளுக்கு பணி ஏற்பு கடிதம் வழங்கப்படவுள்ளது. மேலும் பேக்கேஜ் 3ல் மான்குட்டை பகுதியில்  சுத்திகரிப்பு நிலையம் DBOPT முறையில் அமைத்திட 21.07.10ல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டதில் 8 நிருவங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரப்பெற்றன. பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்கு ஒப்புநோக்குப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

பயனடையும் கோட்டங்கள் - 54
பயனடையும் மக்கள் தொகை - 5 .67 லட்சம்
திட்டம் வடிவமைப்பு காலம் - 30 ஆண்டுகள்
திட்ட அடிப்படை ஆண்டு - 2010
மக்கள் தொகை - 8.20 லட்சம்
2025ல் இடைக்கால மக்கள் தொகை - 10.52 லட்சம்
2040ல் உச்சக்கட்ட மக்கள் தொகை - 13.24 லட்சம்
சுத்திகரிக்கப்படும் கழிவு நீர் ஒரு நபர் நாளொன்றுக்கு - 90 லிட்டர்
மொத்த கழிவு நீர் அளவு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்பு - 59 மி லி நாளொன்றுக்கு
குழாயின் மொத்த நீளம் வழங்கப்படவுள்ள கழிவு நீர் - 418 கி.மீட்டர்
குழாய் இணைப்புகள் - 90 ஆயிரம்